சனிப்பெயர்ச்சி 2025: அஷ்டம சனியில் இருந்து தப்பித்த கடக ராசி.. இனி ராஜா மாதிரி வாழ்க்கையை வாழ்வீங்க

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடக ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Kadagam

இந்த ஆண்டின் சனிப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி விலகுகிறது. எட்டாம் இடத்தில் சனி விலகினாலும், ராகு வருகிறதே என்ற அச்சம் ஏற்படும். எட்டாம் இடத்தில் சனி தான் நிறைய கஷ்டங்கள் கொடுக்கும். ராகு பெரிய அளவில் கஷ்டத்தை தரமாட்டார். அஷ்டம சனி விலகுவதால் 5 வருடங்களாக இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.

குடும்பப் பிரச்சனைகள், கணவன், மனைவி, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், பெற்றோரிடம் இருந்து வந்த அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். நிம்மதி பெருமூச்சு விடும் காலமாக இருக்கும். 2 இல் கேது, 8 இல் ராகு, 12 இல் குரு பகவான் வந்து விடுவதால் அஷ்டமசனி விலகுவது நன்மையைத் தந்தாலும் கூட 12 ஆம் இடத்தில் வரக்கூடிய குரு பகவான் தேவையில்லாத செலவுகளைக் கொடுப்பார்.

ராகு 8 இல் வருவதால் பிரிவினை வரும். வெளியில் நல்ல வீடு கட்டிச் செல்வது, கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக் குடும்பமாகப் போகும் வாய்ப்புண்டு. வீட்டில் பிரச்சனைகள் வந்து பிரிந்து சென்றாலும் அது நன்மையிலேயே முடியும். சனி பகவான் 8 இல் இருந்து விலகும்போது பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். மன பாரத்தைக் குறைக்கும்.

பள்ளி மாணவ, மாணவிகள் பேசக்கூடிய வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். யாருடன் நட்பாக இருக்கிறோம், தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியத்திற்கு போகக்கூடிய சனி பகவான் பித்ருக்களின் ஆசிர்வாதத்தை கொடுப்பார். திருமண யோகங்கள் உண்டு. விவாகரத்துப் பெற்றவர்கள் இரண்டாம் திருமணம் செய்யலாம். எந்த விதமான பிரச்சனையும் வராது.

வியாபாரிகள் கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் கவனம் தேவை, தேவையில்லாமல் அடுத்தவர்களுக்கு கடன் வாங்கித் தருவது, சமூக சேவை செய்வது போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய நட்புகளை நம்ப வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும்.

கடக ராசியில் இருக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் நல்ல அன்பும், ஆதரவும் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும், புனர்பூஷ நட்சத்திரக்காரர்களுக்கு உத்தியோகம் செய்பவர்களுக்கு புதிய உத்தியோகம், வேலை மாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்ற காலமாக இருக்கும், வியாபாரம் கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிதாக கடனை வாங்காமல் இருப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு சோம்பேறித் தனமாக இருக்கும். மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். தோல் வியாதிகள் இருப்பவர்களுக்கு மருத்துவப் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடகத்தில் பாக்கியத்தில் வரக்கூடிய சனி பகவானால் பித்ருக்களின் ஆசீர்வாதம் அருமையாக இருக்கும்.

பரிகாரங்கள் - கடலோரத்தில் இருக்கக்கூடிய சிவன் ஆலயங்கள் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருவேணி சங்கமம், பூரி ஜகன்நாதர் ஆலயம் உள்ளிட்டவற்றுக்கு அமாவாசை காலங்களில் சென்று பித்ரு காரியங்கள் செய்வது நல்லது. வர்க்கலாவில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும்.

கடக ராசியினருக்கு சனி பகவான் 9 ஆம் இடத்திற்கு வருவதால் அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்கும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பவள உயர்வு கிடைக்கும். இந்த ஆண்டின் இறுதியில் இருந்து நல்ல காலம் பிறக்கும்.

சனி பகவானின் மாற்றம் மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினங்களில் அன்னதானம் செய்வது நல்லது. சிவன் ஆலயத்திற்குச் சென்று பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு தானம் அளிப்பது நல்ல பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+