வச்சு செய்யப்போகும் சனி.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசி.. இதையெல்லாம் உடனே செய்யுங்க
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவானைப் பொருத்தவரை முன்ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல பிரதிபலன்களை கொடுப்பார். சனிப்பெயர்ச்சி என்றால் அச்சப்படத் தேவையில்லை. கருணை உள்ளம் கொண்டவர் சனி பகவான். சனி பெயர்ச்சி வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது, கைம்பெண்களுக்கு உதவுவது, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பவர்கள், கடின உழைப்பாளிகளுக்கு, மனதார சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களைத் தருவார். பறவை பட்சிகளுக்கு தான தர்மம், ஏழைகளுக்கு தான தர்மம் செய்பவர்களுக்கு கருணை மழை பொழிவார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் யார். எந்தவிதமான பாதிப்புகளை எல்லாம் சந்திக்கப் போகிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய சனி பகவான் ஏற்கனே அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள், நன்றாக இருப்பவர்கள் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது நல்லது. இந்த சனி பகவான் உங்களுக்கு ஆக்கத்தை கொடுப்பார். வேலை வாய்ப்பில் அலைச்சல் உண்டானாலும் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். நீங்கள் நம்பி பழகியவர்கள் கூட உங்களுக்கு துரோகம் செய்தது குறித்து உணரும் தன்மை ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
தொழில் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்புணர்ச்சியை தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கடின உழைப்பைக் கொடுப்பது நல்லது. நகை கடை, ஐடி துறையினர், அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. சுய ஜாதகத்தை எடுத்து பரிசீலனை செய்து பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். தான தர்மங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.
சிம்மம் - சிம்ம ராசியில் இருப்பவர்கள் அலர்ஜி, தொற்று, சளி தொந்தரவு, கடைசி பிள்ளையால் பிரச்சனைகள் ஏற்படும். சிறு சிறு அவமானங்கள் ஏற்படும். மாடிப்படி ஏறும்போது கவனமாக இருக்க வேண்டும். கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பறவைகளுக்கு தான தர்மம் அளிப்பது, ஆச்சார்யர்கள், ஐயங்கார், அய்யர்களுக்கு வஸ்திர தான் செய்வது நல்ல பலன்களைத் தரும். குருவையும், வாயுவையும் வணங்கிய குருவாயூரப்பனை வணங்குவது நல்ல பலன்களைத் தரும்.
உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. உங்களுடைய பிடிவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வ புண்ணியம் எனும் தொழில் நிமித்தமாக வேறு ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்புண்டு. புதிதாக தொழில்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. சொந்த ஊரில் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு உங்களுக்கு அனைத்துவிதமான நல்ல பலன்களைத் தரும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் வரக்கூடிய சனி பகவான் உங்களுக்கு தொழில் துறை உள்ளிட்ட எந்த துறையிலும் கெடுபலன்களைத் தரமாட்டார். ஆனால், சில சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எந்தவொரு விஷயமானாலும் வீண் விவாதம் செய்யாமல் கடந்து செல்வது நல்லது. சித்தர்கள் வழிபாடு செய்வது நல்லது. அண்ணாமலையாரை வழிபடுவது, கிரிவலம் செல்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமை கிரிவலம் யோக பலன்களைத் தரும். கிரிவலம் சென்றுவந்து போர்வை தானமாக வழங்கலாம்.
பெண்கள் நகை அணிகலன்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. சுண்டல் தானம் செய்வது நல்லது. சனியினால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications