சுக்கிர பெயர்ச்சி பலன்: மகர ராசிக்கு கட்டு கட்டாக பணத்தை அள்ளும் யோகம்.. ஆண், பெண்ணால் வரும் ஆபத்து
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது மகர ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் மகர ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்கு 6 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்கிறார். சுக்கிரன் உங்களுக்கு 5க்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம, குழந்தை ஸ்தானத்தின் அதிபதி. தொழில் ஸ்தானத்தின் அதிபதியும் சுக்கிரன் தான். 6 ஆம் இடம் என்பது கடன், நோய், பகை வம்பு, வழக்கை குறிப்பது. சுக்கிரன் 6 இல் அமர்வதால் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
கடன் வாங்கும், முடிக்கும் யோகம்
ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்ப்பு, பகை, வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் தொடர்பான விஷயங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடனைப் பற்றி சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கான கடன் வாங்குவது, படிப்பு செலவு, திருமணம், தொழிலுக்காக கடன் வாங்குவது போன்றவற்றை செய்வீர்கள். கடனை அடைக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நல்ல வேலையாட்கள் கிடைக்கக்கூடிய காலகட்டம்.
பண வரவு அதிகரிக்கும்
6 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் இணைவு பெற்றிருப்பதால் பணத்திற்குப் பிரச்சனைக்கு இருக்காது. தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி அளிக்கும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சுக்கிரன் என்பது மகரத்துக்கு ராஜயோகாதிபதி என்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். சர்க்கரை வியாதி தொடர்பான விஷயங்களில் அதீத கவனம் தேவை. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. ஏற்கனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் மருந்து உட்கொள்வதில் அக்கறை தேவை.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
குரு, சுக்கிரன் 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் முதலீடுகள் செய்வதற்கு உகந்த காலகட்டமாக இருக்கும். இடம், விவசாய நிலம் வாங்குவது சிறப்பைக் கொடுக்கும். வண்டி, வாகனத்துக்கு காரண கிரகம் சுக்கிரன். வண்டி, வாகனம், வீட்டுக்காக கடன் வாங்குவீர்கள். தங்களுடைய தேவைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஜவுளி, கலைத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டம்.
லாபம் கொட்டும்
சுக்கிரன் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் ஜூலை 31 வரை பயணிப்பதால் சகோதர வகையில் நன்மைகள் நடக்கும். சகோதரர்களுக்காக சில விஷயங்களை செய்வீர்கள். லாபத்தை அனுபவிப்பதற்கான விஷயங்களை செய்வீர்கள். ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் பணத்தை அள்ளிக் கொடுக்கும் யோகம் உண்டாகும். சினிமா, கலைத் துறையில் நுழையும் வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டின் மூலமாக தன வரவு, ஏற்றுமதி, இறக்குமதி துறை அற்புதமாக இருக்கும்.
வெளிநாடு யோகம்
அகம், உணர்வு, எதிர்பாலினம் சார்ந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் புனர்பூசனம் நட்சத்திரத்தில் ஆகஸ்ட்12 முதல் 20 ஆம் தேதி வரை பயணிப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூரில் வேலை செய்வது, வெளிநாடு வேலை கிடைக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள், ஜாக்பாட் கிடைக்கும். பணம், பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் சிறப்புகள் உண்டாகும். அகம் சார்ந்த விஷயத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவது சிறப்பைத் தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, மஞ்சள் பட்டு சாற்றி வழிபடுவது மேன்மையை ஏற்படுத்தும். பசுநெய் விளக்கேற்றுவது நற்பலன்களை அள்ளித் தரும்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications