Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2021: கன்னி ராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரனால் யாருக்கு என்ன பலன் - பரிகாரங்கள்

சிம்மராசியில் இருந்த சுக்கிரனும்,புதனும் இன்று முதல் கன்னி ராசியில் இணைகின்றனர். சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைய அதே இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெறுகிறார். உச்சம் பெற்ற புதனுடன் நீசம் பெற்ற சுக்கிரன் இணைவதால் அவர் நீசப

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைந்துள்ளார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். சுக்கிரன் அசுர குரு. யோகத்தையும் சுகத்தையும் தருவார் சுக்கிரன். அறுசுவை உணவை சுவைக்க வைப்பார். சொசுகு வாழ்க்கை வாழ வைப்பவர் அவர்தான். மாடி வீடு மெத்தை சுகம், கணவன் மனைவி சந்தோஷத்தையும் தரக்கூடியவர் சுக்கிரன்தான்.

சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக இருந்தால் போதும் அவருக்கு சந்தோஷங்கள் அபரிமிதமாக இருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் மறைமுகமான நோய்களை தருவார். சிலருக்கு பாலியல் தொடர்பான நோய்களும் ஏற்படும். கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வெள்ளிக்கிழமை அம்பிகையை விளக்கேற்றி வணங்கவும்.

ரிஷபம்

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாடு பயணம் சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.

கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது. கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மன் கோவில்களுக்கு வெள்ளை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். இது சுக்கிரனின் நீச்சம் பெறும் இடம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். முகத்தில் பொலிவும் அழகும் கூடும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு நிற மலர்கள் வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் குடியேறியுள்ளார். சுப விரைய செலவுகள் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வேலை, படிப்பு விசயமாக வெளிநாடு செல்வீர்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவன் ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும். பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை தேடி வரும் காலமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். புதன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். வீடு மனை நிலம் வாங்குவதற்கான காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். தினசரி சூரிய பகவானை வழிபடவும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரி சொல்வதற்கு மதிப்பு கொடுக்கவும். வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யலாம். நல்ல தகவல் தேடி வரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில்மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூறி விளக்கேற்றி வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பசுவிற்கு வெல்லம் கொடுக்க நன்மைகள் அதிகம் நடக்கும். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம். கோவிலுக்கு சந்தனம் வாங்கிக்கொடுக்கலாம் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+