தமிழ் புத்தாண்டு பலன்: சிம்ம ராசியை வச்சு செய்யப்போகும் கவனம்.. கடன் விஷயத்தில் ரொம்ப கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு காலசர்ப்ப தோஷ நிலையில் சந்திரன் ராகுவோடும், ராசியில் கேதுவும் இருக்கிறார். 8 ஆம் இடத்தில் இருக்கும் சனி, செவ்வாய், புதனின் தாக்கம் உள்ளது. நவம்பர் மாதத்திற்குப் பிறகு ராகு, கேது மாறுவதால் கடன் பிரச்சனைகள் அதிகமாவதற்கான வாய்ப்புள்ளது. 8 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் பகையை சம்பாதித்துக் கொள்ளும் அமைப்புள்ளது.

கடன்
நெருங்கிய சொந்தங்களிடம் கடன் வாங்குவது, மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிம்ம ராசியில் இருக்கும் அப்பா, மகன் உறவில் கவனமாக இருப்பது நல்லது. நிறைய சண்டைகள், கருத்து வேறுபாடுகள் அதிகமாவதற்கான வாய்ப்புகள், அதனால் பிரிவினை வருவதற்கான அமைப்புள்ளது.
பிள்ளைகளுக்கு ஏற்றம்
புதிதாக திருமணம் ஆனவர்கள் குடும்பத்தைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்வது, அவர்களுடன் பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நன்மை பயக்கும். மற்றவர்கள் உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சிம்ம ராசியினருக்கு லாபத்தில் குரு பகவான் இருக்கிறார். பிள்ளைகளுக்கு நல்ல காலம் நடக்கக்கூடிய யோகம் உண்டு.
முன்னேற்றம்
6 ஆம் இடத்திற்குரிய சனி பகவான் 8 ஆம் இடத்தில் அமருவது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். புதிய வேலைகள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கான அழுத்தம் ஏற்படும். குரு பெயர்ச்சி நடைபெறும் ஜூன் 2 ஆம் தேதியன்று குரு பகவான் கடக ராசியில் உச்சமடையும் போது குரு அஷ்டம ஸ்தானத்தைப் பார்க்கிறார். தொந்தரவுகள், பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய யோகத்தை ஏற்படுத்தும். தெய்வ திருத்தலங்களுக்குச் செல்வது, தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை பயக்கும்.
பிரச்சனைகள் தீரும்
பூர்வீக சொத்துகள் சம்பந்தமான பிரச்சனைகள் எல்லாம் ஜூன் 2 ஆம் தேதிக்குப் பிறகு நீங்கும். பழைய சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்குவதற்கான அமைப்பு உண்டாகும். 4க்கு உரிய செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருப்பதால் தாயின் உடல் நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை முறையாகச் செய்வது நன்மை பயக்கும்.
பொறுமை
மிகப்பெரிய உழைப்பை போடும் காலகட்டமாக இருக்கும். சாதரணமாக செய்யக்கூடிய விஷயங்களில் சிரமமும், கஷ்டப்பட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகமும் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் நிதானம், பொறுமையை இந்த ஆண்டு முழுவதும் கடைப்பிடிப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். தவறுதலான சேர்க்கை, பழக்கவழக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். வண்டி, வாகனம் மாற்றுவதற்கான கனவுகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்த எதிரிகள் தொல்லை நீங்கும். உடல்நலனில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வாராக்கடன்கள் வந்து சேரக்கூடிய அமைப்பு உள்ளது. கிரெடிட் கார்டு, டாக்குமெண்ட்,
முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்குகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications