For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி பெருமாளை தரிசிக்க.. கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் ரிலீஸ் - மூத்த குடிமக்களுக்கு சர்ப்ரைஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளன

Google Oneindia Tamil News

திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளன. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆந்திர மாநிலத்தில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது.

காளஹஸ்தி..திருப்பதி..குலதெய்வகோவில்..விக்னேஷ் சிவனை கரம்பிடிக்க வேண்டுதல் வைக்கும் நயன்தாரா காளஹஸ்தி..திருப்பதி..குலதெய்வகோவில்..விக்னேஷ் சிவனை கரம்பிடிக்க வேண்டுதல் வைக்கும் நயன்தாரா

ஏழுமலையான் ஆன்லைன் தரிசனம்

ஏழுமலையான் ஆன்லைன் தரிசனம்

ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, தோல் உற்சவம் ஆகிய கட்டண சேவைகளில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே தரிசிக்க விரும்பும் பக்தர்களும் தங்களுக்கு தேவையான டிக்கட்டுகளை தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 முன் பதிவு செய்யலாம்

முன் பதிவு செய்யலாம்

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பல்வேறு சேவைகள் குறித்தும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத கட்டண முன்பதிவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட்-2022 மாதத்தில் நடக்கும் ஸ்ரீவாரி சேவை கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலனகர சேவை ஆகியவைகளை இன்று பிற்பகல் 3:00 மணி வரை யாத்திரிகர்கள் முன்பதிவு செய்யலாம். DIP முடிவுகள் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும். திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பல்வேறு சேவைகள் குறித்தும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத கட்டண முன்பதிவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட்-2022 மாதத்தில் நடக்கும் ஸ்ரீவாரி சேவை கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலனகர சேவை ஆகியவைகளை இன்று பிற்பகல் 3:00 மணி வரை யாத்திரிகர்கள் முன்பதிவு செய்யலாம். DIP முடிவுகள் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும்.

 ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட்

ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட்

தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு உரிய தகவல் அவர்களுடைய மொபைல் போன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதே போல திருப்பதி ஏழுமலையானை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 300 ரூபாய் கட்டண தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை

மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை

ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டோக்கன்கள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

எப்போது சாமி தரிசனம்

எப்போது சாமி தரிசனம்

ஒரு நாளைக்கு 1,000 டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் டோக்கன்கள் வெளியிடப்பட இருக்கும் நிலையில் அவற்றை பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Thirumalai Tirupati Devasthanam has announced an important announcement for the devotees going to see the Elumalaiyan Dharisanam. Tickets for the Subrapadam, Archana, Tomalai, Sagasra Kalasapisekam and Thirupavadai services to be held in August have been released online. Devotees who book tickets will be selected through an online DIP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X