Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழரை சனி..அஷ்டம சனி பாதிப்பு குறையணுமா? விநாயகரை இப்படி வணங்குங்கள்.. தீராத கடனும் தீரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகரை வழிபட வந்த வினையும் வரப்போகும் வினையும் விலகி ஓடும். கடன் பிரச்சினை தீரவும், ஏழரை சனி, அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் கணபதியை எந்த நாளில் எப்படி வணங்கலாம் என்றும் பார்க்கலாம்.

முழு முதற்கடவுள் விநாயகரை வணங்க நாள் கிழமை தேவையில்லை என்றாலும் சில பரிகாரங்களுக்காக விநாயகரை வழிபட குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. கடன் பிரச்சினையை தீர்ப்பதில் கணபதிக்கு நிகர் வேறு யாருமில்லை. இன்று போய் நாளை வா என்று அந்த சனிபகவானுக்கே பாடம் எடுத்தவர் கணபதி. மனிதர்களுக்கு ஏழரை ஆண்டு என்பது போல் சனி தசை தேவர்களுக்கு ஏழரை மாதம், கடவுள்களுக்கு ஏழரை நாள். கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை சனீஸ்வர பகவான். அவர் விநாயகரை பிடிக்க வேண்டிய காலம் வந்தது. விநாயகரை பிடிக்க வந்தார் சனீஸ்வரன். விநாயகரை வந்து வேண்டினார் சனீஸ்வரன். விநாயகப் பெருமானே என் கடமைப்படி நான் உங்களைஏழரை நாட்கள் பிடித்திருக்க வேண்டிய காலம் இது. அதற்கான பலன்களையும் நீங்கள்அனுபவிக்க வேண்டும். என் கடமையைச் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.

விநாயகர் மறுக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் என்தாயிடம் சென்று நீங்கள் என்னை பிடிக்கவிருப்பதை சொல்லி விட்டு வருகிறேன்.நீங்கள் நாளை என்னை வந்து பிடித்துக் கொள்ளலாம். என் முதுகில் இன்று போய்நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினார். சனீஸ்வரனும் விநாயகர் முதுகில் இன்று போய் நாளை வருகிறேன் என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார். மறுநாள் தான் கூறியபடியே சனீஸ்வரன் வந்தார். என் முதுகில் என்னஎழுதியிருக்கிறீர்கள் படியுங்கள் என்றார் விநாயகர். இன்று போய் நாளைவருகிறேன் என்று முதல் நாள் தான் எழுதியதையே படித்தார். சனீஸ்வரனையே ஏமாற்றியவர் விநாயகர்.விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

விநாயகர்

விநாயகர்

விக்கினங்களை நீக்குபவர் விநாயகர். முழு நம்பிக்கையுடன் விநாயகரை வழிபட்டு, சரியான பாதையில் நடப்பவர்களுக்கு எந்த ஒரு தடையும் வராது. விநாயகர் துணையாக நின்று பயத்தை நீக்கி, தடைகளை விலக்கி, வெற்றிக்கு வழிகாட்டுவார். விநாயகர் அமைதியாக நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்கும் கடவுளாக இருக்கிறார். அவரை அமைதியாக, ஆழ்ந்து வணங்கினால் நம்முடைய உள்மன ஆற்றலைப் புரிந்துகொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறலாம்.

திங்கட்கிழமை பரிகாரம்

திங்கட்கிழமை பரிகாரம்

திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு உகந்த நாட்களாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள் கொடுப்பவர், ஆனைமுகப் பெருமான்.

காரிய வெற்றி தரும் கணபதி

காரிய வெற்றி தரும் கணபதி

உங்கள் வீட்டில் பிள்ளையார் சிலை இருந்தால் அந்தப் பிள்ளையாருக்கு, பாலபிஷேகம் செய்து, சந்தனத்தால் அலங்காரம் செய்து, குங்குமப்பொட்டு வைத்து, அருகம்புல் சாத்தி, எருக்கன் பூ கிடைத்தால் அதிலிருந்து, ஒரு ஐந்து எருக்கன் பூக்களை வைத்து, அலங்காரம் செய்து கொள்ளுங்கள். எருக்கன் இலையை விநாயகரின் முன்பாக வைத்து, அதன் மேல், மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றவேண்டும். இந்த வழிபாட்டை குடும்பத்தோடு சேர்ந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்து, நீங்கள் தொடங்கப் போகும் காரியம், எந்தவித தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக தொடங்கி, தோல்வி இல்லாத வெற்றி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.3 வாரம் திங்கட்கிழமை இந்த பூஜையை செய்து, முடித்துவிட்டு, தொடங்கிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.

 வெற்றிலை மாலை

வெற்றிலை மாலை

ஏழரை சனி, அஷ்டமத்து சனி காலத்தில்தான் அதிகமாக ஒருவர் கடன் வாங்குவார்கள். கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கலாம். விநாயகரை வேண்டிக் கொண்டு நமக்கு ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்காக நாம் ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் முன்பு வைத்து வேண்டிக் கொண்டாலே போதும். நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார். ஆனால் மனதார பிரார்த்தனை செய்துகொண்டு நியாயமான கோரிக்கையை வைக்க வேண்டும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை பரிகாரம்

வெள்ளிக்கிழமை பரிகாரம்

மாலையாக கட்ட முடியாதவர்கள் வெற்றிலையில் உங்களது கடன் தொகையை எழுதி,அந்த வெற்றிலையின் மேல் ஒரு துண்டு வெட்டிவேர், சிறிதளவு நெல்மணி, இரண்டு அருகம்புல், இந்த பொருட்களை வைத்து, இந்த வெற்றிலையை அப்படியே அரச இலையின் மேல் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்து விடுங்கள். இறுதியாக விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை மனதார வைத்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை பரிகாரம்

வெள்ளிக்கிழமை பரிகாரம்

மாலையாக கட்ட முடியாதவர்கள் வெற்றிலையில் உங்களது கடன் தொகையை எழுதி,அந்த வெற்றிலையின் மேல் ஒரு துண்டு வெட்டிவேர், சிறிதளவு நெல்மணி, இரண்டு அருகம்புல், இந்த பொருட்களை வைத்து, இந்த வெற்றிலையை அப்படியே அரச இலையின் மேல் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்து விடுங்கள். இறுதியாக விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை மனதார வைத்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

அருகம்புல் மாலை

அருகம்புல் மாலை

கொடுத்த கடன் திரும்ப வருவதற்கு விநாயகர் கோவிலுக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும். பிள்ளைகள் நன்றாக படிக்கவும் நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும், செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கவும் புதன்கிழமை அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபடலாம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு சிறப்புப் பூஜைகள் செய்வது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். இது தவிர மாதம் தோறும் வரும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்புப் பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். விநாயகரை வணங்கி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, நேர்மறைய ஆற்றல் அதிகரிக்கும். நமது மனம் அமைதியடையும் வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+