Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. கோபத்தை தவிர்ப்பது நல்லது
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் இனி நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
கவனம்
காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி, அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் அதீத கவனம் தேவை. உணவு முறையில் அஜீரணக் கோளாறில் கவனம் தேவை. தூக்கத்தில், எழும்பு கடிக்கும்போது, உணவு சாப்பிடும்போது பேசிக் கொண்டே இருப்பதால் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் சூழல் உள்ளது. உணவுக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலகட்டம்.
தொழில்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக ஏற்றங்களைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக நீங்கும். பெரிய அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொட்டது துலங்கக்கூடிய யோகம் ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மீறி கொடுத்தால் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கும் நிலை ஏற்படும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும் காலகட்டம் என்பதால் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் ஏற்றம் பெறுவீர்கள்.
வழிபாடு
எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் உங்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். எல்லா விதத்திலும் அனுகூலமும், சுபிக்ஷமும் ஏற்படும். குலதெய்வத்தை மானசீகமாக வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். நவக்கிரகத்தில் சுக்கிரன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications