Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனி பெயர்ச்சி எப்போது? யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்

Subscribe to Oneindia Tamil

திருநள்ளாறு: திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அந்த நாளில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெறும். சனி பெயர்ச்சி நிகழ உள்ளதால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படியே திருநாள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் முதல் வாரத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெறும் எனவும் பரிகார பூஜைகள் சிறப்பு யாகங்கள் அப்போது நடைபெறும் எனவும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.

When is Shani transit in Tirunallaru Shanibhagavan temple important announcement

ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. அதனால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தாரும் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம்.

ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது.

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார். சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும். சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.

சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து வருகின்றனர். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி வரும் 17ஆம் தேதி நிகழ உள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சனி பகவான் கோவிலுக்கு வந்து கொண்டுள்ளனர். இதனால் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

திருநள்ளாறு சனிபகவான் கோவில் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. திருநள்ளாறில் சனி பெயர்ச்சி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என திருநள்ளாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

கடந்த 2017ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி மார்கழி 4ஆம் தேதி அதாவது டிசம்பர் 19ஆம் நாள் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். அதே போல சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்தார். அந்த நாளில் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதே போல இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விழா டிசம்பர் முதல்வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனி பெயர்ச்சியால் மேஷம், கன்னி, தனுசு,மிதுனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஓராளவு சுமாரான பலன்கள் கிடைக்கும் எனவும், கடகம், சிம்மம், விருச்சிகம்,மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம். எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற அனுமன், விநாயகரை வணங்கலாம். சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+