"நான் அவ்வளவு அழகா இருக்கேனா"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (17)
- சுதா அறிவழகன்
"என்ன சுனில்.. அஜீத் போல பாட்டெல்லாம் பாடத் தோணுதோ"
நக்கலடித்த ப்ரீத்தியை ரியர் வியூ மிர்ரரில் பார்த்து சிரித்த சுனில்... "நோ நோ.. ஒரு சித் ஸ்ரீராம் பாட்டு ஞாபகத்துக்கு வருது"
"ஓ.. நான் அவ்வளவு அழகா இருக்கேனா"
"ம்ஹூம்.. நான் அழகா இருக்கேன்"
"ஏய்.. உதை" செல்லமாக முதுகில் குத்தினாள் ப்ரீத்தி.
"ஏன் சுனில்.. அத்தை நம்மளை தப்பா நினைச்சிருக்க மாட்டாங்கள்ள"
"ஏன் அப்படிச் சொல்றே.. சந்தோஷமாத்தான் இருக்காங்க.. அவங்க முகமே மலர்ந்து போயிருந்தது. எனது செலக்ஷன் அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு"

"அப்ப என் செலக்ஷன் சரியில்லையாக்கும்"
"சேச்சே.. அப்படி சொல்லலை.. அம்மாவுக்கு நம்ம ஜோடி பொருத்தம் சரியா பட்டிருக்கு.. அதனாலதான் மனசார சரி சொல்லிட்டாங்க. இத்தனைக்கும் நான் கூட சொல்லலை.. அவங்களே புரிஞ்சிக்கிட்டாங்க.. அதுதான் ஆச்சரியமா இருக்கு. பழைய மனுஷின்னு நினைச்சிருந்தேன் நான்"
"பெண்கள் எதையுமே பார்த்த வேகத்தில் புரிஞ்சுப்பாங்க சுனில்.. அத்தைக்கும் நம்மளைப் பத்திக் கேள்விப்பட்டதுமே புரிஞ்சு போயிருக்கும். அதான் சம்மதம் சொல்லிட்டாங்க"
"எப்படியோ என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி எல்லாமே நடக்குது.. ஹேப்பி"
சொன்ன சுனிலை தனது கையால் இறுக்கிக் கொண்டாள் ப்ரீத்தி.. அதை ரொம்பவே ரசித்தான் சுனில்.
கிண்டலும் கேலியுமாக அந்த பைக் பயணம் ரம்யமாக மாறியது.. எப்படி வந்து சேர்ந்தோம் என்பதே தெரியாமல் இருவரும் பேசியபடி வீடு வந்து சேர்ந்தனர். வழியிலேயே அத்தைக்குக் கொடுப்பதற்காக கொஞ்சம் பழங்கள், அவருக்குப் பிடித்த பட்சணங்களை வாங்கி வைத்துக் கொண்டாள் ப்ரீத்தி.
பைக் நின்றதுதான் தாமதம்.. வேகமாக இறங்கியவள்.. வீட்டுக்குள் விரைந்து சென்றாள்.. வெளியில் சத்தம் கேட்டு உள்ளே இருந்து வெளியில் வந்தார் ரேவதி.. ப்ரீத்தியைப் பார்த்தவர் அப்படியே முகம் மலர " வாம்மா" என்று வரவேற்க.. வேகமாக ஓடிச் சென்ற ப்ரீத்தி அப்படியே ரேவதி காலில் விழுந்தாள்.. உடல் குலுங்கியது. "மருமகள்" அழுவதை உணர்ந்து கொண்ட ரேவதி மெதுவாக பிடித்துத் தூக்கினார்.
"எதுக்கு அழறே. .நல்லது நடக்கப் போகுது. சந்தோஷமாக இருக்க வேண்டாமா"
"நீங்க எனக்கு கடவுள் அத்தை.. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. இந்த வாழ்க்கை நீங்க எனக்குப் போட்ட பிச்சை.. சாகிற வரைக்கும் மறக்க மாட்டேன்" அழுதபடி கூறிய ப்ரீத்தியை அப்படியே அணைத்துக் கொண்டார் ரேவதி.
"அபசகுணமாக பேசாதே.. நல்லதே நடக்கும். இனி நீ அழக் கூடாது.. எப்பவும் சந்தோஷமா இருக்கணும்" என்று அன்பாகக் கூறிய ரேவதியைப் பார்த்து " சரி அத்தே" என்று கூறினாள் ப்ரீத்தி.
வீட்டுக்குள் வந்த சுனில் "அம்மா.. தேங்க்ஸ்மா " என்று தன் பங்குக்கு அம்மாவை அணைத்துக் கொண்டான். இருவரையும் ஒரு சேர நிறுத்திய ரேவதி.. " உங்க கிட்ட நான் ஒரு விஷயத்தை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். எப்பவும் சண்டை போடாம இதே அன்போட, கடைசி வரை சந்தோஷமா மட்டும் இருக்கணும். சரியா.. செய்வீங்களா" என்று கேட்ட ரேவதியிடம் இருவருமே ஒரே குரலில், "கண்டிப்பாம்மா..த்தே" என்று கூறவே ரேவதி உள்ளூர குளிர்ந்து போனார்.
ஹாலில் போன் ஒலித்தது. சுனில் போய் போனை எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான்.
மறுமுனையில் ராமலிங்கம்.. "மாப்ளே.. ராஜியைக் காணோம் மாப்ளை.." மாமா அழுதபடி சொன்னதைக் கேட்டு தலையில் இடி விழுந்தாற் போல உறைந்து நின்றான் சுனில்.
சுனிலுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"என்னாச்சு மாமா.. என்ன சொல்றீங்க.. ராஜி எங்கே போயிருந்தா"
"வேலைக்குதான் மாப்ளே வழக்கம் போல போயிருந்தா. இந்நேரம் திரும்பி வந்திருக்கணும்.. வழக்கம் போல பேசுவதற்காக போன் போட்டேன். சுவிட்ச் ஆப்னு வருது. ஆபீஸுக்குப் போன் போட்டா, அவ இன்னிக்கு ஆபீஸுக்கே வரலைன்னு சொல்றாங்க. சரின்னு அவளோட ஹாஸ்டலுக்குப் போன் போட்டேன். அவ ஊருக்குப் போயி 2 நாளாச்சேன்னு சொல்றாங்க. எனக்கு ஒன்னும் புரியலை மாப்ளை.. "ராமலிங்கத்தின் குரல் உடைந்து போயிருந்தது.
ஸ்தம்பித்துப் போய் விட்டான் சுனில்.. மாமா சொல்லச் சொல்ல அவனுக்கு தலை சுற்றி வந்தது.
"இருங்க மாமா.. பதட்டப்படாதீங்க.. நான் உடனே போய் விசாரிச்சுப் பார்க்கிறேன்.. தைரியமா இருங்க.. "
போனை வேகமாக ஆப் செய்தபடி, அம்மாவிடம் திரும்பி, "அம்மா ராஜியைக் காணோமாம்.. மாமா அழறார்.. என்னாச்சுன்னு தெரியலை.. நான் ஹாஸ்டலுக்குப் போய்ட்டு வர்றேன்"
அம்மாவிடம் வேகமாக சொன்ன சுனில், அப்படியே ப்ரீத்தி பக்கம் திரும்பி "நீ இரு. வந்துர்றேன்" என்று பார்வையால் சொல்லி விட்டு வேகமாக பைக்கை நோக்கி ஓடினான்.
ரேவதி அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அண்ணன் மகளாக இருந்தாலும், சுனிலுக்கு முறை என்றாலும் கூட ஒரே வீட்டில் தங்கினால் சரியாக இருக்காது என்பதால்தான் ஹாஸ்டலில் தங்க வைத்திருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சி வந்து தங்களைத் தாக்கும் என்று கனவில் கூட அவர்கள் நினைக்கவில்லை.
ராஜி ரொம்ப சாஃப்ட். அதிர்ந்து கூட பேசத் தெரியாது. ஆனால் பேச விரும்புவதை கரெக்டாக எடுத்து வைத்து விடுவாள். புத்திசாலி.. மனசளவில் ரொம்ப சாந்தமான பெண். ரேவதிக்கு அதனால்தான் ராஜியை ரொம்பப் பிடிக்கும். தனது மகனுக்கு ஏற்ற பெண் என்று ரொம்பவே ஆசையாகவும் இருந்தார். ஆனால் காலம்தான் வினோதமானதாச்சே.. இப்போது ப்ரீத்தியை, கொண்டு வந்து சுனிலிடம் சேர்த்து வேடிக்கை பார்க்கிறது.
இப்போது ரேவதியின் மனசு முழுவதும் ராஜி வந்து உட்கார்ந்து கொண்டாள். என்ன ஆச்சு அவளுக்கு, எங்கு போனாள் என்ற கேள்விகள் மனதை போட்டு துளைத்தெடுத்தன. ரேவதிக்கு அருகே அமர்ந்து அவரை ஆசுவாசப்படுத்த முயன்றாள் ப்ரீத்தி. அவளுக்குமே மனசு சங்கடமாகி விட்டது. நம்ம வந்த நேரம் இப்படியெல்லாமா நடக்கணும் என்ற கவலை அவளுக்கு.
-------
வேளச்சேரி காவல் நிலையம். இன்ஸ்பெக்டருக்காக காத்திருந்தான் சுனில். ரைட்டரின் டேபிளுக்கு முன்பிருந்த சீட்டில் உட்கார்ந்திருந்த அவனிடம், "இந்தக் காலத்துல ரொம்ப கவனமா இருக்கணும் சார். நாம நல்லா இருந்தாலும், நம்மைச் சுத்தி ஏதாவது ஒரு சனி சுத்திட்டே இருக்கும்.. நாம அசர்ற நேரம் பார்த்து அடிச்சுட்டுப் போயிடும்" லெட்ஜர் ஒன்றைப் புரட்டியபடி சுனிலைப் பார்த்துக் கூறினார் ரைட்டர்.
சுனிலுக்கு மனசே சரியில்லை. ரைட்டர் சொன்னதைக் கேட்டு, ஆமா சார் என்று தலையை மெதுவாக ஆட்டி வைத்தான்.
"இன்ஸ்பெக்டர் வர லேட்டாகுமா சார்"
"வர்ற நேரம்தான். பக்கத்துல ஒரு தெப்ட் கேஸ்.. 10 லட்சம் அடிச்சுட்டுப் போயிட்டானுக.. அந்த ஸ்பாட்டுக்குப் போயிருக்கார். வந்துருவார்.. பொறுங்க"
சரி சார் என்றபடி தனது செல்லை எடுத்தான் சுனில். நெட்டை ஆன் செய்து வாட்ஸ் ஆப்புக்குள் நுழைந்த சில விநாடிகளில் ஒரு மெசேஜ்.. ராஜியிடமிருந்து...!
அப்படியே ஜெர்க் ஆன சுனில் வேகமாக மெசேஜை ஓபன் செய்தான். அது ஒரு ஆடியோ.
(தொடரும்)
பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ]
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications