பிரண்ட்ஸ் பட ஷூட்டிங்கில் விஜய் செய்த செயல், மறக்க முடியாது! 25 வருஷமா மனதிற்குள் இருக்கு! நடிகர் ஸ்ரீமன் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் ஸ்ரீமன் இவர்களின் நட்பு பற்றிக் பலரும் அறிவார்கள். இவர்கள் இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியானது. இந்த நேரத்தில்தான், விஜய் பற்றி தான் இவ்வளவு நாளாக மனதுக்குள்ளே பூட்டி வைத்திருந்த ஒரு பெரிய ரகசியத்தை ஸ்ரீமன் போட்டுடைத்துள்ளார்.

டான்ஸ்க்கு ரெக்கமண்ட் செய்த விஜய்
'ப்ரண்ட்ஸ்' படத்தை பற்றிப் பேசும்போது பலருக்கும் விஜய், சூர்யா, வடிவேலு உடன் வில்லன் பாத்திரத்தில் நடித்த ஸ்ரீமனும் நினைவுக்கு வருவார். படத்தோட 'பெண்களோடு போட்டி போடும் பாடல்' எல்லாருக்கும் பிடித்த பாடல். பொதுவா, ஒரு வில்லனை ஹீரோவுடன் சேர்த்து ஆட வைக்கமாட்டார்கள். ஆனால், அந்தப் பாடலில் விஜய், சூர்யாவுடன் ஸ்ரீமனும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பார். இதற்குக் காரணம் அவருடைய உயிர் நண்பர் விஜய் தானாம்.
விஜய் சொன்னது
விஜய் தான், இயக்குநர் சித்திக்கிடம், என் நண்பன் நல்லா டான்ஸ் ஆடுவான் சார், அவனையும் ஆட வைக்கலாமே என்று கூறியிருக்கிறார். இதன் பிறகுதான் ஸ்ரீமன் அந்தப் பாடலில் ஆட வைக்கப்பட்டிருக்கிறார். இந்த ரகசியத்தை 25 வருடங்களாக மனதுக்குள் வைத்திருந்த ஸ்ரீமன் தற்போதுதான் வெளிப்படுத்தியுள்ளார்.
கௌதம் பாத்திரமும் விஜய் பரிந்துரையும்
டான்ஸ் ஆட வாய்ப்பு மட்டுமில்லாம, படத்துல நடிக்கிறதுக்கே விஜய் தான் காரணம் என்கிறார் ஸ்ரீமன். ப்ரண்ட்ஸ் படத்தில் கௌதம் கேரக்டரில் (வில்லன்) முதலில் வேறொருவர் தான் தேர்வாகியிருக்கிறார். ஆனா, இயக்குநர் சித்திக் எதிர்பார்த்த அளவுக்கு அவர் நடிக்கவில்லையாம்.
இதைப் பார்த்த விஜய்யும், சூர்யாவும் தான், "ஸ்ரீமனை கௌதமாக நடிக்க வைக்கலாமே" என்று இயக்குநரிடம் யோசனை சொல்லியிருக்கிறார்கள். அப்போது, வேறொரு படத்தின் (சேது படத்தின் தெலுங்கு மறுவுருவாக்கம்) படப்பிடிப்பில் இருந்த ஸ்ரீமனை, விஜய் போன் செய்து பேசியிருக்கிறார். உடனே, ஹைதராபாத்ல இருந்து கிளம்பிப் பழனிக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். ஸ்ரீமன் நடித்ததை பார்த்த சித்திக் அவருக்கு கௌதம் கேரக்டரை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நண்பர்கள் மீதான அன்பு
விஜய் சொல்லித் தான் 'ப்ரண்ட்ஸ்' படத்தில் நடிக்கவும், டான்ஸ் ஆடவும் வாய்ப்பு கிடைத்தது என்பதைச் ஸ்ரீமன் இன்னும் மறக்கவே இல்லை. சில நண்பர்கள் தான் ஒரு நிலைக்குப் போய்விட்டா தன்னுடைய நண்பர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். அவசரத்துக்கு போன் செய்தாலும் சரி அல்லது நட்போடு போன் செய்தாலும் சரி அந்த போனை எடுப்பதே இல்லை. போனை எடுத்தால் நம்மிடம் ஏதாவது வாய்ப்பு கேட்டோ அல்லது உதவி கேட்டோ வந்து விடுவார்களோ என்று நினைப்பார்கள். ஆனால் விஜய் செய்த உதவி எவ்வளவு பெரியது என்று இப்போது ஸ்ரீமன் மனதிறந்து பேசியிருக்கும் நிலையில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
விஜய் அரசியலில் கவனம் செலுத்த நினைத்தாலும், சினிமாவையும், சினிமாவில் உள்ள நண்பர்களையும் விட்டுப் பிரியமாட்டார் என்பதற்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீமன் வெளியிட்ட இந்த ரகசியம் ஒரு சாட்சி.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்!












Click it and Unblock the Notifications