H Vinoth: விஜய்யை தொடர்ந்து டாப் நடிகர் படத்தை இயக்கும் ஹெச். வினோத்.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்!
சென்னை: சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ஹெச். வினோத், முதல் படத்திலேயே பெரிதாக பேசப்பட்டார். அதன்பிறகு அஜித்தை வைத்து எடுத்த 'நேர்கொண்ட பார்வை' அவருடைய கேரியரில் பெரிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது. அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்றதோடு, வசூலிலும் நல்ல ரிசல்ட் கொடுத்தது. அஜித்துக்கும் அந்த படம் பிடித்துப் போனதால், தொடர்ந்து 'வலிமை', 'துணிவு' ஆகிய படங்களிலும் வினோத்துடன் இணைந்து பணியாற்றினார்.
அதன்பிறகு, கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் வினோத் இருந்தார் என்ற பேச்சு கூட வந்தது. ஆனால் அந்த ப்ராஜெக்ட் பல காரணங்களால் தாமதமானது. இதற்கிடையில், விஜய்யை வைத்து 'ஜன நாயகன்' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுவதால், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஜனவரி 9-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த படம், சென்சார் உள்ளிட்ட பணிகள் முடிவடையாமல் இருப்பதால் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால், இந்த மாத இறுதிக்குள் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தனுஷ் - வினோத் கூட்டணி
'ஜன நாயகன்' முடிந்ததும், அடுத்ததாக தனுஷை வைத்து வினோத் படம் இயக்குவார் என்று முன்னதாகவே பேச்சு இருந்தது. இது தனுஷின் 56-வது படம் (டி56) ஆக இருக்கும் என்று கூட சொன்னார்கள். ஆனால் இடையில் தனுஷ், 'போர்த்தொழில்' புகழ் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்.
இதனால், வினோத் - தனுஷ் கூட்டணி உடனடியாக நடக்காமல், இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய தகவல்படி, வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் டி56 இல்லை; அது டி57 ஆக மாறியுள்ளது. அந்த படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் தான் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இடைவேளையில் வேறொரு பெரிய ஹீரோ
இந்த இடைவெளியை சும்மா வீணாக்க வினோத் விரும்பவில்லை போல. கிடைத்த தகவல்படி, இந்த காலகட்டத்தில் இன்னொரு டாப் ஹீரோவை வைத்து ஒரு பெரிய படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இரண்டு முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லியிருக்கிறார் என்றும், இருவருக்கும் கதை பிடித்திருக்கிறது என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு. இதனால், இந்த இரண்டு பேரில் ஒருவருடன் வினோத் அடுத்த படத்தை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், "இன்னும் சில வாரங்களுக்குள் இந்த புதிய ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்" என்று சொல்லும் அளவுக்கு சினிமா வட்டாரங்களில் இந்த தகவல் சூடாக பேசப்படுகிறது.
'ஜன நாயகன்' - விஜய்யின் கடைசி படம் என்ற காரணத்தால் மிகுந்த எதிர்பார்ப்பு, தனுஷ் - வினோத் கூட்டணி உறுதி, ஆனால் தொடங்குவது அடுத்தாண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதற்குள் வினோத் இன்னொரு பெரிய ஹீரோவுடன் புதிய படம் தொடங்க வாய்ப்பு. அதனால், ஹெச். வினோத்தின் அடுத்த படம் யாருடன் என்பது தான் இப்போ கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். விஜய்யின் படம் வெளியான பிறகு, வினோத்தின் அடுத்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் அந்த "டாப் ஹீரோ"ன்னு தெரிஞ்சா தான், அடுத்த அப்டேட் இன்னும் சூடு பிடிக்கும்.












Click it and Unblock the Notifications