பாகுபலி வில்லன் ராணாவின் பரிதாப நிலை! உடல் மெலிந்து ஆளே மாறிய காரணம்.. தன்னம்பிக்கை மனிதர்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் வில்லனாகவும் ஹீரோவாகவும் தனித்துவமான இடத்தை பிடித்தவர் ராணா டக்குபாட்டி. பாகுபலி படத்தில் பல்லாளதேவனாக அவரது உடல் கட்டும், குரலும், கண் பார்வையும் ரசிகர்களை மிரட்டும் அளவுக்கு இருந்தது. அந்த அதிரடி உருவத்தின் பின்னால் இப்படியொரு வேதனை நிறைந்த உடல்நிலை போராட்டம் இருந்தது என்பதை அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்தபோது, ரசிகர்கள் மனசு உடைந்தது.

பாகுபலி வில்லன்
பாகுபலி படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் ஹீரோவாக இருந்தாலும், அதை தொடர்ந்து ராணாவின் நடிப்பும் தான். அவருடைய மிரட்டலாக நடிப்பு பார்ப்பவர்களையே எரிச்சல் பட வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமான சைஸில் இருப்பார். ஆனால் அவர் சமீபத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து மாறி இருந்தார். அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ராணா பேட்டி
இந்த நிலையில் ராணா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது உடல்நிலை குறித்து உருக்கமாக பேசியிருந்தார்."என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. ஒரு நாளில் எழுந்து நின்றதும் உடம்பே என்னை கேட்கவில்லை. ஹாஸ்பிடலுக்கு சென்று செக் பண்ணி பார்த்தபோது தான் நிலைமை எவ்வளவு சீரியஸாக இருக்கிறது என்று புரிந்தது.
உடல் நல பிரச்சனை
கிட்னி செயலிழந்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு பிரச்சனை இருந்தது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லை. பார்வை தொடர்பான சிக்கலும் இருந்தது. உடம்பு முழுக்க ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் வந்தது.
டாக்டர்கள் நேராக சொல்லிவிட்டார்கள் - இந்த நிலைமையில் 70% ஸ்ட்ரோக் வர வாய்ப்பு இருக்கிறது, 30% உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது என்று. அந்த ஒரு வாக்கியம் என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட்டது.
பிஸியான வாழ்க்கை
அதற்கு முன்பு நான் வேலை, படம், ஷூட்டிங், கேரியர் என்றே ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் நான் படுக்கையில் இருந்து எழுந்து நடப்பதே ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று மீண்டும் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலை.
உடல் எடை வேகமாக குறைந்தது. கண்ணாடியில் என்னை நான் பார்த்துக்கொண்டால் கூட அதிர்ச்சியாக இருந்தது. நான் தான் தானா இது என்று தோன்றும். அந்த காலம் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் மிகவும் கடினமானது.
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. அந்த சிகிச்சைக்கு பிறகு வாழ்க்கை மெதுவாக திரும்ப தொடங்கியது. ரிகவரி என்பது ஒரு நாளில் நடக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன முன்னேற்றம் தான். இன்று ஒரு படி நடக்க முடிந்தால், நாளை இரண்டு படி நடந்தேன் - அதுவே பெரிய வெற்றி போல இருந்தது.
தன்னம்பிக்கை மனிதன்
அந்த அனுபவம் எனக்கு ஒரு பெரிய பாடம் கற்றுக்கொடுத்தது. நாம் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எவ்வளவு வெற்றி பெற்றாலும், உடல் நலம் சரியில்லையென்றால் எதுவும் இல்லை. வாழ்க்கையை மெதுவாக அனுபவிக்க கற்றுக்கொண்டேன். முன்பு இருந்த ராணா வேறு... இப்போது இருக்கும் ராணா வேறு. இன்று நான் உயிருடன் இருக்கிறேன், மீண்டும் வேலை செய்கிறேன், நான் விரும்பும் விஷயங்களை செய்கிறேன் - இதுவே மிகப்பெரிய பரிசு என்று நான் நினைக்கிறேன்" என்று ராணா அந்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications