Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வந்த “சேயோன்”.. பழைய ஃபார்மில் கலக்குறாரே
சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வருகிற முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் இருந்து சினிமாவுக்கு வந்து, இன்று தனக்கென ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில், அவரது அடுத்த படமான சேயோன் குறித்து வெளியான புதிய க்ளிம்ப்ஸ் இந்த பிறந்தநாளை ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பாக மாற்றியுள்ளது.
வசூலுக்கு குறைவில்லை
'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் முழு உற்சாகத்தில் இருப்பது அவரது சமீபத்திய தேர்வுகளிலேயே தெரிகிறது. 'பராசக்தி', 'மதராஸி' போன்ற படங்கள் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வசூலில் வலுவான நிலையை காட்டியதால் அவரது மார்க்கெட் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் நடிகராக அவர் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.

நடிப்பில் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல கதைகளை செலக்ட் செய்து வருவது சிவகார்த்திகேயனின் இன்னொரு பலம். தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் உருவாகியுள்ள தாய் கிழவி படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
சேயோன் படம்
அந்தப் படத்தின் வேலைப்பாடும், அவருடைய கதை சொல்லும் முறைவும் சிவகார்த்திகேயனை மிகவும் ஈர்த்ததாக சொல்லப்படுகிறது. அதுவே அவரை, வெங்கட் பிரபு படத்திற்கு முன்பாகவே அந்த இயக்குநருடன் இணைந்து 'சேயோன்' படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தை கமல் ஹாசன் தனது Raaj Kamal Films International நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். கமல் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது என்பதே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நேற்று வெளியான First Look போஸ்டரில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தது ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாக இருந்தது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாள்
பிறந்தநாளை முன்னிட்டு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவில் அவர் கிராமத்து இளைஞராக, சாமி ஆடுபவரைப் போன்ற தீவிரமான உடல் மொழியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து எதிரிகளுக்கு எதிராக நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை இப்படி ஒரு மண்ணின் மணம் கமழும் கதாபாத்திரத்தில் பார்க்கப்போகிறோம் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை பின்னணியில் ஒலிக்கும் விதம் அந்த காட்சிகளுக்கு கூடுதல் வலிமையை தருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் 'காமெடி ஹீரோ' என்ற அடையாளத்தை தாண்டி, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக மாறியிருப்பது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை காட்டுகிறது. கமர்சியல் ரீதியாகவும், கண்டண்டு ரீதியாகவும் கலக்கும் நடிகராக அவர் மாறிவிட்டார் என்பதே தொழில்நுட்ப வட்டாரங்களின் கருத்து.
சேயோன் படம் க்ளிம்ப்ஸ் வீடியோ
பிறந்தநாளை கொண்டாடும் இந்த நேரத்தில், புதிய லுக், புதிய கதை, வித்தியாசமான அணுகுமுறை ஆகியவற்றுடன் 'சேயோன்' படம் அவரது திரைப்பயணத்தில் இன்னொரு முக்கியமான படியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கமல் ஹாசன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த கூட்டணி மீண்டும் வெற்றியைத் தருமா என்பதே தற்போது கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
சாதாரண தொடக்கத்திலிருந்து ஸ்டார்டம் வரை வந்த இந்தப் பயணம் தொடர வேண்டும், இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவரைக் காண வேண்டும் என்பதே ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்தாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவரது அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையட்டும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications