For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

Google Oneindia Tamil News

- புன்னியாமீன்

உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது.

இத் தினத்தினை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு ( (IASP), இ உலக சுகாதார‌ அமைப்பு (WHO) ஆகியன இணைந்து 2003 ஆம் ஆண்டில் இருந்து பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து வருகிறது.

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். முட்டாள்தனமாக, கோழைத்தனமாக, பரிதாபமாக மனிதன் எடுக்கும் முடிவுகளில் ஒன்றாகவே இது இருக்கின்றது. தற்கொலை என்பது இறப்புக்களுக்கான காரணத்தில் 13 ஆவது இடத்தை வகிக்கிறது.

அதிக தற்கொலைகள் இடம்பெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் இனங்காணப்படுகின்றன. அதேவேளை, பதிவு செய்யப்பட்ட தற்கொலைகள் குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்காவும் ஆசியாவின் சில சில பகுதிகளும் அறியப்பட்டுள்ளன.

''தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது'' என மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் 40 விநாடிகளுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொதுவாக, தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.

English summary
The world observes today as World suicide prevention day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X