For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு சராசரி 'சைஸ்' மூளையும் ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனும்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

உலகின் மாபெரும் இயற்பியலாரான ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனின் மூளை மிக அதிகமான மடிப்புகளையும், மிக சிக்கலான தோற்றத்தையும் கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.

உலகிலேயே மிகச் சிறந்த சமன்பாடு...

உலகிலேயே மிகச் சிறந்த சமன்பாடு...

கோட்பாட்டு இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் எய்ன்ஸ்டீனின் general theory of relativity (பொது சார்பு கோட்பாடு) இயற்பியல் குறித்த நமது அறிவைப் புரட்டிப் போட்டது. நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர் உருவாக்கிய சூத்திரமான E = mc2 தான் இதுவரை உலகிலேயே மிகச் சிறந்த சமன்பாடாகக் கருதப்படுகிறது. இந்த பார்முலா தான் அணுகுண்டின் அடிப்படையாகும்.

சிக்கலான கேள்விகளுக்கு விடை..

சிக்கலான கேள்விகளுக்கு விடை..

இவை தவிர எலெக்ட்ரான்களின் செயல்பாட்டை விளக்கும் photoelectric effect, அணுக்களின் துணைத் துகள்களின் செயல்பாட்டை விளக்கும் quantum theory என உலகம் அதுவரை கேள்விப்படாத விஷயங்களைச் சொன்னவர் எய்ன்ஸ்டீன். அதே போல அண்ட சராசரங்களின் செயல்பாட்டை விளக்க நியூட்டனின் தத்துவங்கள் போதாது என்ற நிலையில், தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை (special theory of relativity) முன் வைத்து, பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடித் தந்தார்.

போட்டான்கள், ஒளியின் வேகம், பிரபஞ்சத்தின் இயக்கம் என எல்லா வகையான நவீன இயற்பியல் ஆராய்ச்சிகளையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் எய்ன்ஸ்டீன்.

அணு குண்டின் தந்தை...

அணு குண்டின் தந்தை...

ஜெர்மனியைச் சேர்ந்த யூதரான இவர், ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நாட்டுக்கே போகவில்லை. அமெரிக்காவுக்கு வந்தவர் அங்கேயே தங்கி ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார். ஜெர்மனியின் பெர்லின் அறிவியல் அகாடமியின் பேராசிரியராக இருந்தபோதே அணு ஆராய்ச்சிகளை இவர் ஆரம்பித்திருந்தார். 2ம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது ஹிட்லர் அணு குண்டு என்ற ஒன்றைத் தயாரிக்கலாம் என்று கருதிய இவர், அது குறித்து அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்டுக்கு எச்சரிக்கை செய்ததோடு, அமெரிக்காவும் அணு குண்டு ஆராய்ச்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை சொன்னதோடு, உதவியும் செய்தார். ஆனாலும், அணு குண்டு பயன்படுத்தவதை இவர் எதிர்க்கவும் செய்தார்.

ஆராய்ச்சிக்கு உள்ளான எய்ன்ஸ்டீனின் மூளை:

ஆராய்ச்சிக்கு உள்ளான எய்ன்ஸ்டீனின் மூளை:

உலகின் மாபெரும் ஜீனியஸாகக் கருதப்படும் இவர், 1955ம் ஆண்டு இறந்தபோது அவரது மூளையை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதை அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டதையடுத்து இவரது மூளை தனியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

மூளை என்பது...?

மூளை என்பது...?

மனித மூளை என்பது சராசரியாக 1,230 கிராம் (ஒரு கிலோ 200 கிராம்) எடை கொண்டது. இதன் முக்கிய பாகங்கள் பிராண்டல் லோப், பெரைடல் லோப், ஆக்ஸிபிடல் லோப், டெம்போரல் லோப், லிம்பிக் லோப், இன்சுலார் கார்டெக்ஸ் ஆகியவை.

பிராண்டல் லோப் என்பது மூளையின் முன் பகுதி. இது தான் நமது சிந்தனைகளின் கூடாரம். இதில் பிரச்சனையோ, சேதமோ ஏற்பட்டால் நமது சிந்தனைகள் சிதரும். பெரைடல் லோப் பகுதியின் முக்கிய வேலை தொடு உணர்வுகளை ஒருங்கிணைப்பது. இது பிராண்டல் லோபின் பின் பக்கம் உள்ளது. ஆக்ஸிபிடல் லோப் என்பது பின் பக்க மூளையில் இருப்பது. நமக்கு பார்வைத் திறனைத் தருவது இது தான்.

240 பகுதியாய் பிரிக்கப்பட்ட எய்ன்ஸ்டீனின் மூளை:

240 பகுதியாய் பிரிக்கப்பட்ட எய்ன்ஸ்டீனின் மூளை:

டெம்போரல் லோப் என்பது மூளையின் கீழ் பகுதி. இது வாசனை, கேட்கும் திறன், முக பாவனைகளைத் தருவது. லிம்பிக் லோப் மூளையின் மத்தியப் பகுகியில் உள்ளது. இது தான் நமக்கு நினைவாற்றல், குணநலன்களைத் தருவது. இன்சுலார் கார்டெக்ஸ் மூளையின் போர்வை போன்றது. இது தான் வலி உள்ளிட்டவற்றை உணர வைப்பது.

மீண்டும் ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனின் மூளைக்கு வருவோம். அவரது மூளை 240 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடம் ஆராய்ச்சிக்காக தரப்பட்டது. இதைப் பிரித்தவர் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சி வல்லுனரான டாக்டர் தாமஸ் ஹார்வி.

ஆய்வு முடிவுகள்...

ஆய்வு முடிவுகள்...

இந்த 240 பாகங்களும் மூளை நரம்பியல் டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், உளவியல் ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் பிரித்துத் தரப்பட்டு அதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இந்த மூளைப் பகுதிகளில் பல காணாமல் போய்விட்டன. ஆனாலும் இந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து சமீபத்தில் எய்ன்ஸ்டீனின் மூளை குறித்து ஒரு சில முடிவுகளுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மனித பரிணாமம் குறித்த ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரான டீன் பால்க் தலைமையிலான குழு, எய்ன்ஸ்டீனின் மூளையின் சில பகுதிகளில் மிக அதிகமான மடிப்புகளும், பள்ளங்களும் (grooves) மிக அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கூர்மையாக ஆராயும் திறன்:

கூர்மையாக ஆராயும் திறன்:

85 பிற மூளைகளுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. எய்ன்ஸ்டீனின் மூளையின் எடை என்னவோ மற்றவர்களைப் போலவே சராசரி எடை கொண்டதாகவே இருந்துள்ளது. ஆனால், அதன் மடிப்புகள், முகடுகளின் (ridges) எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்துள்ளது.

மேலும் ஒரு விஷயத்தை மிகக் கூர்மையாக ஆராயும் திறனையும் முன்யோசனையையும் தரும் prefrontal cortex பகுதி எய்ன்ஸ்டீனின் மூளையில் கொஞ்சம் பெரிதாகவே இருந்ததும் உறுதியாகியுள்ளது. எய்ன்ஸ்டீன் மறைந்தது 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி. அப்போது அவருக்கு வயது 76. ஆனால், அவரது இயற்பியல் கோட்பாடுகளுக்கு ஏது சாவு?..

English summary
Physicist Albert Einstein's brain, though of average size, contained an unusually high number of folds which may have provided the genius with the ability to think in "extraordinary ways", scientists claim. The Nobel Prize-winning scientist's brain was divided into 240 blocks and distributed to researchers after his death in 1955. Most of the specimens were lost and little was written about its anatomy. Scientists now have used photographs of the brain before it was segmented to produce a "road map" connecting the 240 sections and the 2,000 thin slivers into which they were later split, 'The Telegraph' reported. The pictures, taken from the private collection of pathologist Thomas Harvey, who divided the brain up, show a number of peculiarities about Einstein's brain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X