ஐயா, சாமி.... இந்த கார்களால் பொலியூசன் ஜாஸ்திப்பா...:

Subscribe to Oneindia Tamil

ஆனால், எப்போது சீனாவும், இந்தியாவும், உடைந்து போன சோவியத் யூனியனின் ரஷ்யாவும், பிரேசிலும் தங்களது பொருளாதார சீர்திருத்தங்களில் இறங்கி free economy, market economy என்ற பேண்ட், சட்டையைப் போட்டுக் கொண்டனவோ, அப்போதே அவற்றின் அடிப்படை பொருளாதார நிலைமைகள் மாறிவிட்டன.

BRICS establish $100bn bank and currency reserves to cut out Western dominance

இப்போது இந்த நாடுகளில் சந்தைகளில் அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி 'சப்ளை- டிமாண்ட்' தான் ராஜா. காசைப் போடு, தயாரிச்சுக்கோ, வித்துக்கோ, காசு இருந்தா வாங்கிக்கோ, டிமாண்ட் ஜாஸ்தியா இருந்தா விலையைக் கூட்டிக்கோ, நாங்க (அரசு) எதுவும் கேட்க மாட்டோம். இது தான் மார்க்கெட் எக்கானமி.

இந்த வகையான பொருளாதாரத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகியவை இறங்கி தங்களை பொருளாதாரரீதியில் ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டன.

''ஐயா, துரை, எஜமானே, எங்க மக்களுக்கு சாப்பாடு போட கோதுமை இறக்குமதி செய்யக் கூட காசு இல்லை'' என்று உலக வங்கியிடம் கடனும், சர்வதேச நாணய நிதியத்திடம் டாலரும் கேட்ட இந்தியாவின் நிலைமை எல்லாம் மலையேறிவிட்டது.

''நாட்ல கார்கள் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யவும் மக்களுக்கு தங்கம் இறக்குமதி செய்யவுமே எல்லா டாலரும் செலவாயிருது'' என்று 'சலிப்பு' எக்கானமி நிலைக்கு வந்துவிட்டது இந்தியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+