For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fact check: கொரோனா XBB வைரஸ் மிகவும் ஆபத்தானதா? அறிகுறியே இல்லாமல் ஆளைக் கொல்லுமா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை : கொரோனா XBB வேரியண்ட், மற்ற எல்லா கொரோனா வைரஸையும் விட மிகவும் ஆபத்தானது, அறிகுறிகளே இல்லாமல் உயிரைக் கொல்லும் அபாயம் கொண்டது என்ற எச்சரிக்கை வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவின் மாறுபாடான XBB வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், அதை ஆர்.டி-பி.சி.ஆர் சோதனை மூலம் கூட கண்டறிவது கடினம் என்றும் எச்சரித்து அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஓமிக்ரான் கொரோனா வேரியண்ட் பரவல்.. பொது இடங்களில் மாஸ்க் அணிய மத்திய அரசு அறிவுரைஓமிக்ரான் கொரோனா வேரியண்ட் பரவல்.. பொது இடங்களில் மாஸ்க் அணிய மத்திய அரசு அறிவுரை

கொரோனா XBB எச்சரிக்கை

கொரோனா XBB எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கோவிட்-ஓமிக்ரான் XBB வைரஸ், டெல்டா வேரியண்ட்டை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், மிகக்குறைந்த நேரத்திலேயே தீவிரத்தை அடையும், சில நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் தென்படாது. இந்த வைரஸ் பாதிப்பை உறுதியாகக் கண்டறிவதும் கடினம் என்ற அபாய எச்சரிக்கைகளோடு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அறிகுறிகள் - இருமல், காய்ச்சல் இருக்காதா?

அறிகுறிகள் - இருமல், காய்ச்சல் இருக்காதா?

புதிய கொரோனா - ஒமிக்ரான் XBB வைரஸின் அறிகுறிகளாக
மூட்டு வலி
தலைவலி
கழுத்தில் வலி
மேல் முதுகு வலி
நிமோனியா
பொதுவாக பசி இருக்காது ஆகியவை அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேசமயம், மற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகளின்போது ஏற்படும், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படாது என அந்த எச்சரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியாது

டெஸ்ட் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியாது

கோவிட் - ஓமிக்ரான் XBB டெல்டா வேரியண்ட்டை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இது குறுகிய காலத்தில் நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது. கோவிட் - ஓமிக்ரான் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பல நோயாளிகள் வலியற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். ஆனால் எக்ஸ்ரேயில் நிமோனியா இருப்பது தெரியவந்தது. ஸ்வாப் டெஸ்ட் மூலம் கோவிட்-ஓமிக்ரான் XBB வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியவில்லை. இந்த வைரஸ் பரவி நேரடியாக நுரையீரலை பாதிக்கிறது, இதனால் கடுமையான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் அந்த எச்சரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலியான செய்தி

போலியான செய்தி

ஆனால், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த எச்சரிக்கை செய்தி, போலியானது என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல கொரோனா XBB வேரியண்ட் ஆபத்தானது அல்ல என்றும், பொதுமக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒமிக்ரானை விட XBB மிகவும் ஆபத்தானது என்று கூறவில்லை. மேலும், டெல்டா வேரியண்ட்டை விட குறைவான ஆபத்து கொண்டது என்றும் WHO கூறியுள்ளது.

 அதே அறிகுறிகள் தான்

அதே அறிகுறிகள் தான்

WHO தகவல்களின் படி, கொரோனா ஒமிக்ரான் XBB என்பது BA.2.10.1 மற்றும் BA.2.75 துணை வகைகளின் கலவை. XBB மற்ற கோவிட்-19 வகைகளைப் போலவே கண்டறியப்படக் கூடியது. மற்ற ஓமிக்ரான் வேரியண்ட் வைரஸ் போலவே, அதே RT-PCR சோதனைகளின் மூலம் XBB பாதிப்பை எளிதாகக் கண்டறியலாம். XBB வைரஸும் ஓமிக்ரான் வைரஸின் மற்ற வேரியண்ட்கள் போலவே இருமல், காய்ச்சல், சளி, உடல் வலி போன்ற பொதுவான அறிகுறிகளையே கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரப்ப வேண்டாம்

பரப்ப வேண்டாம்

இதன் மூலம், சமூக வலைதளங்களில் XBB வைரஸ் பற்றி பரப்பப்பட்டு வரும் செய்தி போலியானது என உறுதியாகியுள்ளது. தவறான தகவல்களோடு, மக்களை பயமுறுத்தும் வகையிலான இந்தச் செய்தியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், இதுபோன்ற மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் தகவல்களை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கொரோனா ஒமிக்ரான் XBB வேரியண்ட், மற்ற எல்லா வைரஸையும் விட மிகவும் ஆபத்தானது. இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளே இல்லாமல் உயிரைக் கொல்லும், ஆர்டிஆர் பரிசோதனை மூலம் கூட இந்த வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியா

முடிவு

XBB வைரஸ் மிக ஆபத்தானது என்று பரவும் தகவல் பொய்யானது. கொரோனா ஒமிக்ரான் XBB வேரியண்ட், டெல்டா வேரியண்ட்டை விட ஆபத்து குறைவானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகு

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A widely circulated post claims that Omicron XBB Variant is deadlier than all other variants and it cannot be detected through RT-PCR tests. But the truth is, XBB is less lethal than Delta. It is just as easily detected by the same PCR or RTK tests, as the original Omicron variant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X