For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுரோட்டில் நீச்சல் குளமா? ஸ்டாலின் ஐயா.. பழைய வீடியோவை பகிர்ந்து.. சிக்கலில் மாட்டிய பாஜக நிர்மல்!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பாஜக நிர்வாகி சிடி நிர்மல் குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பருவமழைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்ற மாவட்டங்களிலும் இதேபோல் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் பாஜக தமிழ்நாடு மாநில ஐடி விங் செயலாளர் சிடி நிர்மல் குமார் பகிர்ந்து வீடியோ ஒன்று சர்ச்சையாகி உள்ளது.

FACT CHECK: இப்படி ஒரு உத்தரவா? ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளில் மற்ற உடல்களை அடக்கம் செய்ய தடையா? FACT CHECK: இப்படி ஒரு உத்தரவா? ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளில் மற்ற உடல்களை அடக்கம் செய்ய தடையா?

ஸ்டாலின்

ஸ்டாலின்

ராமநாதபுரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பாஜக நிர்வாகி சிடி நிர்மல் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா ஆணைக்கு இணங்க.. ராமநாதபுரம் காவரிப்பட்டினம் முத்துராமலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின்படி.. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகர் ஆணைக்கு இணங்க நடுரோட்டில் நீச்சல் குளம் அமைத்து கொடுத்துள்ளனர். நடு ரோட்டில் இப்படி நீச்சல் குளம் அமைத்துக்கொடுத்த திமுக அரசுக்கு நன்றி என்று ஒரு இளைஞர் பேசுவது போல அந்த வீடியோ உள்ளது.

வீடியோ

வீடியோ

அவர் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் குட்டை ஒன்றிற்கு முன் நின்று இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சாலையில் சேறும் சகதியுமாக தண்ணீர் தேங்கி அதில் காட்சி அளிக்கிறது. இதைத்தான் அந்த இளைஞர் பகிர்ந்து இருக்கிறார். இதை பாஜக தமிழ்நாடு மாநில ஐடி விங் செயலாளர் சிடி நிர்மல் குமார் பகிர்ந்து உள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி உள்ளது. நிர்மல் குமார் பழைய வீடியோவை பகிர்ந்து உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

சங்கி சார்

சங்கி சார்

இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அதில், Mr சங்கி sir...க்கு ஒரு வருடமா கும்பகர்ண தூக்கம் போல... உடைப்பு ஏற்பட்டது 4/10/2021...அதனை 6/10/2021 ல் சரி செய்தாச்சு இந்த சங்கிங்க இப்ப தூக்கிட்டு வாராங்க...இதனையும் ஒரு கூட்டம் நம்பி பரப்புது.. அண்ணாமலை சார் நீங்க retweet பண்ணவில்லையா!! உங்களுக்கும் அவருக்கும் ஆகாதுல மறந்துட்டேன், என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை அவர் வெளியிட்டு உள்ளார்.

சர்ச்சை மேல் சர்ச்சை

சர்ச்சை மேல் சர்ச்சை

அதாவது அங்கே பணிகள் நடந்து, சாலை சரி செய்யப்பட்ட பழைய புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார். பாஜக சிடி நிர்மல் குமார் சமீபத்தில்தான் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதற்கு அவர் செய்து இருந்த கமெண்ட் பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து அந்த கமெண்ட் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

ராமநாதபுரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பாஜக நிர்வாகி சிடி நிர்மல் குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது.

முடிவு

பாஜக நிர்வாகி சிடி நிர்மல் குமார் பகிர்ந்த வீடியோ பழையது. 6/10/2021ல் அங்கு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுவிட்டன.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fack Check: BJP Nirmal Kumar shares an old video of Ramanadhapuram to attack CM Stalin .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X