For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் தோல் பிரச்சனை வருமா? உண்மை என்ன தெரியுமா? FACT CHECK

Google Oneindia Tamil News

சென்னை: மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது.

பொதுவாக உணவு தொடர்பாக பல்வேறு நம்பிக்கைகள் மக்கள் இடையே உள்ளன. ஒரு சில உணவுகள் உடல் சூடு அதிகரிக்கும் ஒரு சில உணவுகள் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் என்றெல்லாம் நிறைய நம்பிக்கைகள் உள்ளன.

சில உணவுகள் உடம்பிற்கு ஒப்புக்கொள்ளாது, சில வகை உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்றும் நிறைய நம்பிக்கைகள் உள்ளன.

இதில் நம்பிக்கைகள் ஆதாரமே இல்லாத பொய்கள் ஆகும்.

Fact check: திமுகவினருக்கு எதிராக செய்தி போடாவிட்டால் அடிப்போம் என்றாரா பாஜக நிர்வாகி? உண்மை என்ன? Fact check: திமுகவினருக்கு எதிராக செய்தி போடாவிட்டால் அடிப்போம் என்றாரா பாஜக நிர்வாகி? உண்மை என்ன?

நம்பிக்கை

நம்பிக்கை

அப்படிதான் மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது. அதாவது இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மோர் சாப்பிடும் நாளில் மீன் சாப்பிட கூடாது. தயிர் சாதத்துடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது என்றும் நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது.

 இன்னொரு வதந்தி

இன்னொரு வதந்தி

அதேபோல் மீன், தயிர் இரண்டும் அதிக புரோட்டின் கொண்ட உணவுகள். இதை செரிக்க நேரம் எடுக்கும். இதனால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். இரண்டிலும் லேக்டோஸ் அதிகம் உள்ளதால் வயிற்று பாதிப்பு ஏற்படும். அதேபோல் Leukoderma எனப்படும் தோல் பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மக்கள் பலர் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள்.

பொய்

பொய்

ஆனால் இந்த நம்பிக்கைக்கு உண்மையான ஆதாரம் எதுவும் இல்லை. அதாவது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் தோலில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்பதற்கு ஆதாரமே இல்லை. மேலும் தோல் தொடர்பான வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கும் ஆதாரமே இல்லை. இது வெறும் நம்பிக்கைதான். மருத்துவ ஆதாரங்கள் இதற்கு பின் இல்லை.

 வாய்ப்பே இல்லை -லாக்டோஸ்

வாய்ப்பே இல்லை -லாக்டோஸ்

எந்த மருத்துவரும் இது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தெரிவித்தது இல்லை. சிலருக்கு லாக்டோஸ் எதிர்ப்பு பாதிப்பு இருக்கும். லாக்டோஸ் உணவுகள் சாப்பிட்டால் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வேண்டும் என்றால் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். மற்றபடி இரண்டும் அலர்ஜி இல்லை என்று சொல்லும் யார் வேண்டுமானாலும் மீனையும், தயிரையும் சேர்த்து சாப்பிடலாம்.

Fact Check

வெளியான செய்தி

மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது.

முடிவு

இது உண்மை அல்ல. இது வெறும் நம்பிக்கைதான். மருத்துவ ஆதாரங்கள் இதற்கு பின் இல்லை. எந்த மருத்துவரும் இது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தெரிவித்தது இல்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Can milk and fish combination give you white patches on skin? What is the truth?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X