For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு நல திட்டம் குறித்து சீக்கியர்களுக்கு மட்டும் ஐஆர்சிடிசி மெயில் அனுப்புகிறதா?.. பொய்யான செய்தி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ரயில்வே துறையின் ஈமெயில் மூலம் சீக்கியர்கள் மட்டும் ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக ஒரு பொய்யான செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே) மறுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்திய ரயில்வே கிட்டதட்ட 2 கோடி மெயில்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சீக்கியர்களுக்கு மட்டும் ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக செய்திகள் வைரலாகின.

Fact Check: Did government reach out only to Sikhs through IRCTC emails?

மத்திய அரசின் நலத் திட்டங்கள், விவசாயம் சார்ந்த தகவல்களும் சீக்கியர்களுக்கு அனுப்பி அச்சமூகத்தினரின் ஆதரவை பெறவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலை இந்திய ரயில்வே அப்பட்டமாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி சீக்கியர்கள் மட்டும் அல்ல அனைத்து சமூகத்தினருக்கும் அரசின் நலத்திட்டங்களை நாங்கள் அனுப்பி வருகிறோம் என தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் அனுப்புகிறோம் என சொல்வது பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Fact Check

வெளியான செய்தி

ஐஆர்சிடிசி மூலம் சீக்கியர்களுக்கு மட்டும் மத்திய அரசு மெயில்களை அனுப்பி வருவதாக தகவல்

முடிவு

சீக்கியர்கள் மட்டுமல்ல மக்களின் நலன்கருதி அனைத்து சமூக மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து மெயில்களை அனுப்பி வருவதாக ஐஆர்சிடிசி விளக்கம்

ரேட்டிங்

Half True
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Did Government reach out only to Sikhs through IRCTC e mails?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X