For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் ஞானவாபி மசூதியில் கிடைத்த லிங்கமா? தீயாக பரவும் போட்டோ.. கடைசியில் பார்த்தால்..!

Google Oneindia Tamil News

டெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்று கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஞானவாபி மசூதி விவகாரம் நாடு முழுக்க தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்து பிரிவினர் பலர் ஞானவாபி மசூதி என்பது அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு 1669ல் அவுரங்கசீப் மூலம் கட்டியதாக கூறி வருகின்றனர்.

சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், வாரணாசி நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சர்வே

சர்வே

இந்த வழக்கில் மசூதிக்கு உள்ளே சர்வே பணிகளை செய்ய அனுமதிக்கப்பட்டது. உள்ளே சர்வே பணிகளை மேற்பார்வை செய்த அஜய் மிஸ்ரா என்ற வழக்கறிஞரின் போட்டோகிராபர் மூலம் அங்கு சிவலிங்கம் இருந்ததாக சொல்லப்படும் பகுதியின் புகைப்படம் லீக் ஆனது. உள்ளே லிங்கம் இருப்பதாக கூறப்படும் புகைப்படம் வைரலானது. ஆனால் அது வெறும் நீர் வெளியேற்றும் பவுண்டைன் அமைப்பு என்று இஸ்லாமியர்கள் கூறினர்.

சர்ச்சை

சர்ச்சை

அது முகம் கழுவ பயன்படுத்தப்படும் பவுண்டைன் அமைப்பு என்று விளக்கம் அளித்தனர். இந்த லீக்கான போட்டோ காரணமாக பிரச்சனை ஏற்படும். இதனால் சர்வே பணிகளை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும் இஸ்லாமிய அமைப்பினர் மூலம் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் சிவலிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை சீல் செய்ய சொன்னார்கள். அதே சமயம் இஸ்லாமியர்கள் மற்ற இடங்களில் தொடர்ந்து பாடு வழிபாடு நடத்தலாம் என்றும் உத்தரவிட்டனர்.

வழிபாடு

வழிபாடு

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதுதான் லிங்கத்தின் புகைப்படம் என்று கூறி வேறு சில பொய்யான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று பல பொய்யான புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கங்களை ஞானவாபி மசூதியில் கண்டுபிடித்ததாக நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.

அகழ்வாராய்ச்சி

அகழ்வாராய்ச்சி

அதன்படி வியட்நாமில் இருக்கும் பகுதி ஒன்றில் 2020 மே மாதம் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அகழ்வாராய்ச்சி ஒன்றில் இந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது 9ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம் ஆகும். இந்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து, அது தற்போது ஞானவாபி மசூதியில் கிடைத்த சிவலிங்கம் என்று நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் ஒன்இந்தியா தமிழ் சார்பாக செய்யப்பட்ட சோதனையில், அந்த புகைப்படம் 2020ல் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Fact Check

வெளியான செய்தி

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று பல பொய்யான புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

முடிவு

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று பரவும் புகைப்படம் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Image of ‘Shivling’ from Vietnam site is wrongly shared as one from Gyanvapi. ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்று கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X