For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.2000 நோட்டுகளுக்கு தடை? உயரும் கள்ள நோட்டுகளால்.. மீண்டும் வரும் ரூ.1000! பரவும் தகவல் உண்மையா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் வரும் ஜன.1ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.!

கடந்த 2016ஆம் ஆண்டு நவ. 8இல் மத்திய அரசு பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஒரே நாளில் புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பிலான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்றனர். இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்கு மக்கள் அதிகப்படியான சிரமங்களை எதிர்கொண்டனர்.

டக்குனு மாயமான 2000 ரூபாய் நோட்டுகள்! புரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்! ஓ இதுதான் காரணமா! சுவாரசியம்டக்குனு மாயமான 2000 ரூபாய் நோட்டுகள்! புரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்! ஓ இதுதான் காரணமா! சுவாரசியம்

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

அப்போது புழக்கத்தில் இருந்த சுமார் 80% நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தங்கள் கையிலிருக்கும் ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் சென்ற பொதுமக்கள் அங்கேயே காத்து கிடந்தனர். ஒரு சில நோட்டுகளை மாற்றவே பல மணி நேரம் வரை பல பணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

சிரமம்

சிரமம்

பலருக்கும் தங்கள் கைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தும் அதை ஆத்திர அவசரத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை உருவானது. இதே பணமதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்த போதுதான், புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புழக்கத்தில் இருந்த 80% நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பணப்புழக்க பிரச்சினையைச் சரி செய்ய அடுத்த சில மாதங்கள் ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகளை அச்சடித்துத் தள்ளியது. இருப்பினும் நிலைமை சரியாகவே சில மாதங்கள் வரை ஆனது.

 ரூ.2000 நோட்டுகள்

ரூ.2000 நோட்டுகள்

பணமதிப்பிழப்பு குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்கிறது சில நாட்களாக இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகவும் அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளே அதிகளவில் கள்ள நோட்டுகளாக அடிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு மிக விரைவில் ரூ.2000 நோட்டுகளைத் தடை செய்ய உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

 போலி நோட்டுகள்

போலி நோட்டுகள்

இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளாகவே 2000 ரூபாய் நோட்டுகளைப் புதிதாக அடிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், தற்போது கைப்பற்றப்படும் போலி நோட்டுகளில் பெரும்பாலானவை 2000 ரூபாய் நோட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. நாட்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 2,272ஆக இருந்தது. ஆனால், வெறும் நான்கு ஆண்டுகளில், அதாவது 2020இல் இது 2,44,834ஆக அதிகரித்துள்ளது..

 மீண்டும் வரும் ரூ.1000 நோட்டுகள்

மீண்டும் வரும் ரூ.1000 நோட்டுகள்

மேலும், வரும் ஜனவரி 1, 2023 முதல் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வேகமாகப் பரவியது. ஏற்கனவே பனமிதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்ட போது, பட்ட துன்பங்களை மக்கள் மறக்காத நிலையில், இந்த வீடியோ பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் பலரும் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

விளக்கம்

விளக்கம்

இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசின் பிஐபி ஃபேக்ட் செக் விளக்கமளித்துள்ளது. அதில், "வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளதாகவும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட உள்ளதாகவும் இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அது உண்மையானது இல்லை. அரசு இது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 புழக்கம் குறைவு

புழக்கம் குறைவு

அதேநேரம் மத்திய அரசு தொடர்ந்து 2000 ரூபாய் அச்சடிப்பதைக் குறைத்துக் கொண்டே வந்தது. 2016-17ல் 3,542.991 மில்லியன் (சுமார் 352 கோடி நோட்டுகள்) 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட நிலையில், அது 2017-18இல் 111.507 மில்லியனாகவும் (11 கோடி நோட்டுகள்) 2018-19இல் 46.690 மில்லியனாகவும் (4 கோடி நோட்டுகள்) குறைக்கப்பட்டது. அதன் பிறகு கடைசி 3 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி ஒரு 2000 ரூபாய் நோட்டையும் புதிதாக அடிக்கவில்லை. இப்போது ஏடிஎம் இயந்திரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் அகற்றப்பட்டன. இதன் காரணமாகவே 2,000 ரூபாய் புழக்கம் கணிசமாகக் குறைந்தது.

Fact Check

வெளியான செய்தி

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது; 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது

முடிவு

இது முற்றிலும் பொய்யான தகவல். மத்திய அரசு அதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fake news is spreading that Reserve bank is going to ban 2000 rs note: Fact check about 2000 rs note ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X