For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: உலக கோப்பை படுதோல்வியால் ஓய்வு பெறுகிறாரா கோலி? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், விராட் கோலி குறித்து இணையத்தில் தீயாகத் தகவல் ஒன்று பரவி வருகிறது.

டி20 உலகக் கோப்பை இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றில் டாப் இடங்களைப் பெற்ற இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

முதலாம் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியைப் பாகிஸ்தான் வீழ்த்தியது. நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.

டி20 உலககோப்பை தோல்வி.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்.. என்ன சொன்னார் தெரியுமா? டி20 உலககோப்பை தோல்வி.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?

 மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை எடுத்திருந்தது. அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து ஓப்பனர்கள் இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கினர். 16 ஓவர்களில் எந்தவொரு விக்கெட்டையும் இழக்காமல் இங்கிலாந்து 170 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை ரசிகர்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.

 கோலி ஓய்வு

கோலி ஓய்வு

இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இவர்களின் மோசமான ஆட்டமே இந்தியாவின் தோல்விக்குக் காரணம் எனப் பலரும் சாடினர். இதற்கிடையே முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது.

 உண்மை என்ன

உண்மை என்ன

இது தொடர்பாக விரோட் கோலியின் செய்தியாளர் சந்திப்பு என்றும் கூறி ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருந்தனர். இதை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து இருந்தனர். விராட் கோலியிலன் இந்த திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அதேநேரம் சிலர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

 பழைய வீடியோ

பழைய வீடியோ

இந்த வீடியோவை நாம் ஆய்வு செய்கையில், இதற்கும் டி-20 உலகக் கோப்பைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ ஆசியக் கோப்பை சமயத்தில் எடுக்கப்பட்டதாகும். கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இதே வீடியோவை பல ஆங்கில ஊடகங்கள் பகிர்ந்து உள்ளதையும் பார்க்க முடிகிறது. எனவே, இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.

 என்ன சொல்லி இருக்கிறார்

என்ன சொல்லி இருக்கிறார்

அந்த வீடியோவில் விமர்சனங்களில் தான் பெரியளவில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறும் கோலி, எப்போதும் அணிக்காக 120% கூட தரத் தாயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அணிக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவை தான் விராட் கோலி ஓய்வை அறிவித்ததை போலத் திரித்துப் பரப்பி வருகிறார்கள்.

 மூத்த வீரர்கள் நீக்கம்?

மூத்த வீரர்கள் நீக்கம்?

அதேநேரம் படுதோல்வி காரணமாக இந்தியாவின் டி20 அணியில் பெரிய மாற்றங்கள் வர உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பல மூத்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பை தர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "இப்போது இதைப் பேசுவது சரியாக இருக்காது. மூத்த வீரர்கள் இந்தியாவுக்குப் பல போட்டிகளை வென்று தந்து உள்ளனர்.

 டிராவிட் விளக்கம்

டிராவிட் விளக்கம்

எனவே, இந்த ஒரே போட்டியை வைத்துக் கொண்டு அணியை மாற்ற வேண்டும் எனச் சொல்வதில் சரி இல்லை. அடுத்த உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராக போதுமான காலம் உள்ளது" என்றார். இதன் மூலம் விராட் கோலி ஓய்வு பெறுவதாகப் பரவும் செய்தியும், மூத்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பரவும் செய்தியும் பொய் என்பது உறுதியாகத் தெரிகிறது.

Fact Check

வெளியான செய்தி

நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தகவல் பரவியது.

முடிவு

ஆசியக் கோப்பை பிரஸ் மீட்டை வைத்துக் கோலி ஓய்வு பெறுவதாகத் தவறான தகவல் பரவுகிறது

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Virat Kohli retirement news spreading in social media is not true: Senior players might be removed from Indian team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X