Fact Check: உபி.-யில் 5 ஆண்டுகளாக கலவரங்கள் இல்லையா? குற்றப்பதிவு அறிக்கை சொல்வது என்ன? உண்மை என்ன?
சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் எந்த கலவரமும் நடைபெறவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உண்மையில் உ.பி.யில் கலவரங்கள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பக அறிக்கை சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
அண்மையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எந்த கலவரமும் நடைபெறவில்லை. நமது மாநிலம் அதிகப்படியான முதலீடுகளை பெறத் தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.
அவர்களின் பாதுகாப்பு மீறப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உத்தரபிரதேசம் முற்றிலும் கலவரம் இல்லாத மாநிலமாகவும், குற்றம் இல்லாத மாநிலமாகவும் மாறிவிட்டதாக பேசி இருந்தார். இது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவான குற்ற வழக்குகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பக அறிக்கைகளில் தகவல் சரிபார்க்கப்பட்டன.

கலவர வழக்குகள்
தேசிய குற்றப் பதிவு பணியக தரவுகளின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் 2017-21ம் ஆண்வு வரை 35 ஆயிரத்து 40 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது தவறு என்பது தெரிய வருகிறது. அதேபோல் 2021ல் மட்டும் 5 ஆயிரத்து 302 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன.

35 கலவரங்கள்
அதேபோல் 2017ல் 8 ஆயிரத்து 990 வழக்குகளும், பதிவாகியுள்ளன. 2017ம் ஆண்டோடு, 2021ம் ஆண்டு ஒப்பிட்டு பார்த்தால் வழக்குகள் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கலவரங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 49% குறைந்து 2021ல் 5,846 ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2017 முதல் 2021 வரை 35 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளது.

உண்மை என்ன?
அதேபோல் மாநிலத்தில் வகுப்புவாத கலவரங்கள் 2017 முதல் 2021 வரை 97% குறைந்துள்ளது. உண்மையில், 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் எந்த வகுப்புக் கலவரமும் இல்லை என்றே தேசிய குற்றப் பதிவுப் பணியக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கலவரங்கள் குறைவு
தேசிய குற்றப்பதிவு பணியகம் கலவர சம்பவங்களை வகுப்புவாதம், மதவெறி, சாதிய மோதல், விவசாயம், தொழில்துறை மற்றும் அரசியல் என 15 வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியமைத்த பின்னர், அனைத்து வகை கலவரங்களும் கிட்டத்தட்ட குறைந்துள்ளது. ஆனால் பகை அல்லது தொழில் போட்டி தொடர்பான கலவரங்கள் சுமார் 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பொய்
தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் அறிக்கைபடி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு பின் கடந்த ஆண்டுகளில் கலவரங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், கலவரங்களே நடைபெறவில்லை என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வார்த்தைகள் பொய் என்றே தெரிய வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரங்கள் நடக்கவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். இதனை பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
முடிவு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கலவரங்கள் நடைபெறவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆனால் 2017 முதல் 2021 வரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளது
ரேட்டிங்
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications