ரிஷி சுனக் விஸ்வகர்மாவா? போஸ்டரில் வாழ்த்து! பிரிட்டன் பிரதமருக்கு உரிமைகோரும் சாதிகள் - Fact Check
சென்னை: பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர் என்று கூறி அவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் MKT பேரவை சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டு உள்ள நிலையில் இதன் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
போரிஸ் ஜான்சன் ராஜினாமாவை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்த முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் ஆகியோர் எம்.பிக்கள் ஆதரவு குறைவாக இருந்ததால் அடுத்தடுத்து அதிலிருந்து விலகினர்.

பிரதமரானார் ரிஷி சுனக்
இந்த நிலையில் நேற்று முந்தினம் பிரதமராக அறிவிக்கப்பட்டார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். பிரிட்டன் சட்டப்படி நாட்டின் மூன்றாம் மன்னர் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து நேற்று சார்லஸை சந்தித்து பிரதமராக பதவியேற்ற சுனக், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீரமைப்பேன் என்று உறுதியளித்தார்.

சாதியை தேடும் படலம்
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கையோடு ரிஷி சுனக்கின் சாதியை தேடு வேலையை இந்தியர்கள் தொடங்கிவிட்டனர். ரிஷி சுனக் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இல்லாததால் இவர்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது இரண்டாம் பெயரான சுனக் என்பது சாதி பெயர் இல்லை எனவும் அங்குள்ள ஏராளமான மக்கள் இந்த பெயரை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஸ்வகர்மா சாதி வாழ்த்து
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை MKT பேரவை, விஸ்வகர்மா சமுதாயம் என்று குறிப்பிடப்பட்டு உள்ள அந்த போஸ்டரில், "இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எங்கள் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

உண்மை என்ன?
விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் அதிகம் வசிக்கின்றனர். வட மாநிலங்களிலும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தச்சர், பொற்கொல்லர் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால், ரிஷி சுனக்கின் சாதியை பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விஸ்வகர்மா சமுதாயத்துக்கும் ரிஷி சுனக்கிற்கும் இடையிலான தொடர்பு பற்றி எந்த நம்பத் தகுந்த தகவலும் இல்லை.

Fact Check
வெளியான செய்தி
பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர் என்று கூறி வாழ்த்து தெரிவித்து போஸ்டர்
முடிவு
ரிஷி சுனக்கின் சாதியை பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை
ரேட்டிங்
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications