காராமணி முதல் மொச்சை வரை... பீன்ஸ் வகைகளும் அவற்றின் வியக்கவைக்கும் மருத்துவ குணங்களும்!
இந்திய சமையலில் பீன்ஸ் வகைகள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. பலர் 'பீன்ஸ்' என்றால் ஃபிரெஞ்சு பீன்ஸ் மட்டுமே நினைத்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் இந்தியா முழுவதும் பல்வேறு வகையான பீன்ஸ்கள் வளர்க்கப்பட்டு, சமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் தனித்துவமான சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை எதாவது ஒரு வகை பீன்ஸை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இப்போது இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஃபிரெஞ்சு பீன்ஸ்:

மெல்லியதாகவும், மென்மையான தோலுடனும் இருக்கும் இது விரைவாக சமைந்துவிடும். தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய் இது. பெரும்பாலும் தேங்காய் சேர்த்து பொரியலாகச் செய்வார்கள். காய்கறி குழம்பு அல்லது சாதத்துக்கு சைட் டிஷ் ஆகவும் சேர்க்கலாம். நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் போன்றவை நிறைந்திருப்பதால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு உதவுகிறது.
கொத்தவரங்காய்:

தட்டையான வடிவில், விதைகள் குறைவாக இருக்கும் இது சற்று கசப்பு சுவை கொண்டது. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகம் சமைக்கப்படும். உருளைக்கிழங்குடன் தொக்கு அல்லது பொரியலாக செய்வது வழக்கம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு நல்லது. கசப்புத்தன்மை காரணமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அவரைக்காய்:

தட்டையானது தான், ஆனால் விதைகள் அதிகம் நிரம்பியிருக்கும். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவலாக சமைக்கப்படும். புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. குழம்பு, பொரியல், கூட்டு என பல வகையில் சமைக்கலாம்.
காராமணி:

30-40 செ.மீ நீளமுள்ள நீண்ட காய். சுவை ஃபிரெஞ்சு பீன்ஸுக்கு ஒத்திருக்கும். பெங்கால், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் பருவகாலத்தில் கிடைக்கும். தேங்காய் சேர்த்த பொரியல் பிரபலம். வைட்டமின் ஏ, கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தரும்.
சிறகு அவரை:

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படும். இதன் காய் மட்டுமின்றி இலை, பூ, தண்டு, வேர்க்கிழங்கு கூட சாப்பிடலாம். கோவாவில் சாலட் ஆகப் பயன்படுத்துவார்கள். புரதச்சத்து மிக அதிகம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
மொச்சை பீன்ஸ்:

குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும். தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் திருவிழாக்களில் படையலுக்கு முக்கியமான காய். வேகவைத்து, பொரியலாக அல்லது குழம்பாக சமைப்பார்கள். புரதச்சத்து நிறைந்தது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ரன்னர் பீன்ஸ்:

மிக நீளமாக வளரும் வகை. மலைப்பகுதிகளில், குறிப்பாக ஹிமாச்சல் பிரதேசத்தில் பிரதான உணவில் இடம்பெறும். உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைப்பது வழக்கம். வைட்டமின் கே, மாங்கனீஸ் போன்றவை எலும்பு வலிமைக்கு உதவுகின்றன.
தம்பட்டை அவரை (கத்தி அவரை என்றும் அழைப்பார்கள்):

சுவை ஃபிரெஞ்சு பீன்ஸை விட தீவிரமாக இருக்கும். மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகம் சமைக்கப்படும். குழம்பு, பொரியல் என பயன்படுத்தலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தும். சில இடங்களில் மருத்துவ குணம் கொண்ட காயாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு பீன்ஸ் வகைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. பருவத்துக்கு ஏற்ப, பிராந்தியத்துக்கு ஏற்ப மாறுபடும் இவற்றை மாற்றி மாற்றி சாப்பிடுவது உணவில் பலவகை ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும்.
குறிப்பு: பீன்ஸ் வகைகளைச் சமைக்கும் போது அவற்றை அதிக நேரம் வேகவைக்காமல் (Overcooking), லேசாக வேகவைத்து உண்பது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதையாமல் இருக்க உதவும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications