கேன்சர் கூட வரும்.. கல் வைத்து பழுக்கும் மாம்பழங்கள்..சிம்பிள் டெக்னிக்ஸ்.. எப்படி கண்டுபிடிக்கலாம்?
சேலம்: செயற்கையாக கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் பல உடல் நல பிரச்சினைகள் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
முக்கனிகளில் ஒன்று மாம்பழம்.. அதன் சுவையை பிடிக்காத நபர்களே இல்லை எனலாம். கோடைக்காலங்களில் தான் மாம்பழங்களின் சீசன் ஆகும். மாம்பழங்களில் வெறும் சுவை மட்டும் அல்ல ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இதனால், மாம்பழங்கள் சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதேவேளையில், மாம்பழங்களை செயற்கையாக கல் வைத்து பழுக்க வைப்பதாகவும் அவ்வப்போது நுகர்வோர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுகிறது.

இப்படி கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்களின் ருசி மாறுவதோடு உடல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகிறது என்று உணவு பாதுகாப்பு அதிகரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், மாம்பழத்திற்கு புகழ் பெற்ற சேலத்தில், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மாம்பழ வியாபாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சேலம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டார். அப்போது செயற்கையாக கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் விளக்கினார். இது தொடர்பாக கதிரவன் கூறியதாவது:- மாம்பழ சீசன் தொடங்கியிருப்பதால் கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதாக புகார்கள் அதிகம் வரத்தொடங்கியிருக்கின்றன.
அதனால், சேலம் மாவட்டத்தில் இருக்கும் மொத்த விற்பனை டீலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன..அனுமதி இல்லாத டெக்னிக்குகள் எவை..அதை ஏன் தடுத்து இருக்கிறார்கள் என்பது குறித்தும் இன்று விளக்கினோம். செயற்கையாக பழுக்க வைக்க உணவு பாதுகாப்புத்துறை அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அதற்கு பாதுகாப்பான வழிமுறைகள் சொல்லியிருக்கிறது.
கால்சியம் கார்பைடு என சொல்லப்படும் கல் வைத்து பழுக்க வைக்கக் கூடாது. முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்பேரே செய்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது. எத்திஃபான் திரவத்தை நேரடியாக பழங்களில் படுகிற மாதிரி ஸ்ப்ரே செய்து பழுக்க வைக்கக் கூடாது. செயற்கையாக கல்வைத்து பழுக்க வைக்கும் போது வெளியில் கலர் மட்டுமே மாறும்.

வழக்கமாக ஒரு பழம் பழுக்க வேண்டும் என்றால் ஐந்து கட்ட பிராசஸ் உள்ளது. முதலில் பழம் சாஃப்ட் ஆகும். வாசனை வரும்..இறுதியாக கலர் மாறும். ஒரு பழம் நார்மலாக பழுத்த பழம் என்றால் அறுக்கும் போது சாஃப்ட் ஆக இருக்கும். செயற்கையாக கல் வைத்து பழுக்க வைத்தால் மர மரவென இருக்கும். சுவையும் புளிப்புத்தன்மையாகத்தான் இருக்கும். நார்மலா இருக்காது. இதை பொதுமக்கள் கண்டுபிடிக்கனும்.
ஒரு பழத்தை அறுக்கும் போது அதன் விதையை ஒட்டி வெள்ளையாக இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழம். இயற்கையாக பழுக்கவில்லை என்பதை அது காட்டுகிறது. பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என்ற சந்தேகம் இருந்தால் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். 9444042322-என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

கால்சியம் கார்பைடு வைத்து பழங்களை பழுக்க வைக்கும் போது வயிற்றுப்போக்கு வாந்தி, உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாம். கால்சியம் கார்பைடு உணவுக்கும் சம்பந்தம் இல்லை. அது இண்டஸ்ட்ரிஸ் உடன் தொடர்புடையது. இதில் பாஸ்பரஸ், ஆர்சனிக் போன்ற ஹெவி மெட்டல்கள் உள்ளது. இதெல்லாம் மனிதனுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடியது. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
எனவே இதை தடை செய்ய வேன்டும். கால்சியம் கார்பரேட் கல் வைத்து பழுக்க வைப்பதை உணவு பாதுகாப்புத்துறை தடை செய்துள்ளது. எனவே இது போன்று பழுக்க வைத்தால் உரிமம் ரத்து செய்யப்படலாம். அவர்கள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். சேம்பிள் எடுத்து அனுப்பி அதில் பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் வழிமுறை உள்ளது.கண்டிப்பாக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்" என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications