வெறும் இலை போதும்.. மருந்தாகும் மாதுளை இலைகள்.. தொப்பை கரையணுமா? மாதுளம் இலையை இப்படி குடிங்க போதும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே இலை ஓராயிரம் பிரச்சனையை தீர்க்கிறது என்றால், அது மாதுளையை சொல்லலாம்.. மாதுளை இலைகள் மருந்தாகவும் பயன்படுகின்றன.

மாதுளையில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளன.. இதை சாப்பிடும்போது, புற்றுநோய் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும்.. அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும்கூட, மாதுளம் பழத்தை விடாமல் சாப்பிடுவார்கள்..

Do know the Excellent Health benefits of Pomegranate Leaves and pomegranate leaf is the Best for Digestion

விதைகள்: மாதுளையில் உள்ள விதைகளில் நிறைய நிறைய தளும்பிக்கிடப்பது நார்ச்சத்துக்கள்தான்.. பொதுவாக, பழங்களை சாப்பிட்டாலே மலச்சிக்கல் தீரும் என்பார்கள்.. ஆனால், இந்த மாதுளையில் உள்ள நீர்ச்சத்து, மலச்சிக்கலை விரட்டியடிப்பதில் முதன்மையாக திகழ்கிறது.. இந்த பழத்தின் விதைகள், நம்முடைய சருமத்துக்கும் மிகவும் நல்லது..

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த இந்த மாதுளை மிகச்சிறந்த உணவாகும்.. வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்கும்.. இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்களும், மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.

இப்படி, மாதுளை பழங்கள் எந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே, இலைகளும் உடலுக்கு நன்மையை தருகின்றன.. முக்கியமாக, வைட்டமின் C உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இலைகள் உதவுகின்றன. அதனால்தான், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மாதுளை இலையில் டீ, அல்லது கசாயம்போல காய்ச்சி தருவார்கள்.

மாதுளை இலை டீ: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி இலைகளை சுத்தம் செய்து, அதில் சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தாலே, சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். தொண்டை வலி தீரும்..

அதேபோல, இந்த இலைகளின் தண்ணீரை இப்படி கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்துவிட்டு படுத்தால், நன்றாக தூக்கம் வரும்.. உடல் எடை குறைய நினைப்பவர்கள், குறிப்பாக தொப்பை இருப்பவர்கள், இந்த இலையின் தண்ணீரை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

குளிர்ச்சி இலைகள்: குளிர்ச்சியை தரக்கூடியது இந்த மாதுளை இலைகள். அதனால், உடலில் ஏற்படும் சரும பாதிப்புகளை இந்த இலையை அரைத்து விழுதாக பயன்படுத்தலாம்.. இதனால், கொப்புளங்கள், காயங்கள், முகப்பருக்கள், தீப்புண்கள், வீக்கங்கள், இப்படி பலவித சரும பிரச்சனைகளுக்கு இந்த இலைகள் உபயோகமாகின்றன.

இந்த இலையை கொதிக்க வைத்து குடிக்கும்போது, அஜீரணம் நீங்குகிறது.. செரிமானம் சீராகிறது.. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிரச்சனை தீர்கிறது.. குடல் சுத்தமாகின்றன..

மாதுளை இலை சாறு: வயிற்றுபோக்கு இருந்தால், மாதுளை இலை சாற்றை குடித்தால் உடனே நின்றுவிடும். இதற்கு மாதுறை இலை சாற்றுடன், சிறிது மாதுளை ஜூஸையும் சேர்த்து குடித்தால் இன்னும் நன்மை கிடைக்கும்.. இருமல், சளி பிரச்சனைகள் நீங்குகின்றன.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது.. சருமம் பொலிவு பெறுகிறது.

ஆன்டி பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இந்த இலையில் நிறைந்துள்ளதால், அவை வாயில் காணப்படும் பாக்டீரியாக்களை அழித்துவிடக்கூடியது... இதனால், வாய் புண், வயிற்றுப்புண்களை இந்த இலைகள் ஆற்றுகின்றன.. காது வலியால் அவதிப்படுபவர்கள், மாதுளை இலையின் சாறுகளை சில துளிகள் விட்டால் தீர்வு கிடைக்கும். இந்த பசுமையான இலைகளை அரைத்து பேஸ்ட் போல அரைத்து, கண் மீது தடவினால் கண் நோய்கள் குணமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+