வெறும் இந்த "பச்சை ஜூஸ்" போதும்.. கர்ப்பப்பை கோளாறுகளை ஓட ஓட விரட்டும் அற்புத சூரணம்.. அற்புதம்
சென்னை: கற்றாழை பலவழிகளில் நமக்கு உதவுகிறது.. குறிப்பாக, இளம்பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், இந்த சோற்றுக்கற்றாழையின் பங்கு என்ன தெரியுமா?
சோற்றுக்கற்றாழையை பொறுத்தவரை, வைட்டமின் B, C சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதனால்தான், தினமும், வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடிப்பதால், உடல் எடை குறைகிறது... உடல் சூடு இருப்பவர்கள், கற்றாழை சாறுடன், எலுமிச்சம் சாறு, சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். குடல்புண்ணும் ஆறும்.. நீர்க்கடுப்பு, வயிறு எரிச்சல்களும் தணியும்..
தாம்பத்ய உறவு: தாம்பத்திய உறவு சிறக்கவும், இந்த கற்றாழையின் வேர்கள் பயன்படுகின்றன.. சரும பிரச்சனைக்கும் நல்லது.. ஆனால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இளந்தாய்மார்கள், அலர்ஜி உடையவர்கள் டாக்டரிடம் ஆலோசித்துவிட்டே இந்த கற்றாழை ஜூஸை பயன்படுத்த வேண்டும்.

சரும பாதுகாப்புக்கு இந்த கற்றாழை உதவுவதால்தான், ஃபேஸ் கிரீம்கள், சோப்புகள், ஷாம்ப்புகளில், கற்றாழையை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள். வெறும் கற்றாழையுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால், மங்கு, பருக்கள், தழும்புகள், சுருக்கங்கள், நீங்கி சருமம் பொலிவாகும். கற்றாழை + வெள்ளரிக்காய் சாறு + தயிர் + ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேக் போல தடவலாம். இதனால், கருவளையம், கழுத்து பின்பக்கம் படர்ந்துள்ள கருமை நீங்கும்.
குமரி கற்றாழை: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனையை இந்த கற்றாழை எளிதாக தீர்க்கிறது.. அதனால்தான், இதற்கு குமரிகற்றாழை என்று இன்னொரு பெயரும் உண்டு.. எப்போதுமே வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் தான் மருத்துவ குணம் அதிகம். எனவே, இவைகளை பயன்படுத்துவது சிறந்தது.
இந்த கற்றாழையுடன் தேன் சேர்த்து, மிக்ஸியில் ஜூஸாக அரைத்து வைத்து குடித்தால், பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும். இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு...
லேகியம்: ஒரு பாத்திரத்தில், சுத்தம் செய்யப்பட்ட கற்றாழையும், சமஅளவில் கருப்பட்டியையும் சேர்த்து பாகு போல கிளற வேண்டும். இப்போது உரித்த பூண்டுகளை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

இறுதியில் அனைத்தையும் சேர்த்து கடைந்து எடுத்து கொள்ள வேண்டும். இவைகளை, தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய் பிரச்சனைகள், மலட்டு பிரச்சனைகள் தீரும்.. ஆனால், மருத்துவரிடம் முறையான ஆலோசனையை பெற்று இதை செய்தால் முழு பலன் கிடைக்கும்.
கர்ப்பிணிகள்: மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலியை குறைப்பதற்காக, கற்றாழை சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பெண்களுக்கு தருவார்கள்.. கர்ப்பிணிகளின் உடற்சூட்டை தணிக்கவும், சுகப்பிரசவத்தை தூண்டவும் உதவும், மருந்துகளில் மூலப்பொருளாக கற்றாழை உதவுகிறது.. அதனால்தர்ன, சித்த மருந்துகளில், கற்றாழையை கொண்டு பெண்களுக்காகவே நிறைய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை இந்த கற்றாழைக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அதனால், ஏதாவது ஒரு ரூபத்தில் கற்றாழையை உணவில் சேர்த்து கொள்வது பெண்களுக்கு பலன்தரும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications