முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்! லாலுவின் 2 மகன்கள், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். அவருடன் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி, தேஜ்பிரதாப், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் செளத்ரி உட்பட 28 பேர் பதவியேற்றனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணியின் சட்டசபை தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று பாட்னா காந்தி மைதானத்தில் நிதிஷ்குமார் பதவியேற்பு விழா நடைபெற்றது.
Nitish Kumar takes oath as the Chief Minister of Bihar at Gandhi Maidan in Patna. pic.twitter.com/S9AMNGeAIL
— ANI (@ANI_news) November 20, 2015 முதலில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக பதவியேற்கும் 27 பேரின் பட்டியல் முழுமையாக வாசிக்கப்பட்டது.
Tejashwi Prasad Yadav takes oath of office as minister in Nitish Kumar cabinet pic.twitter.com/GIeXf3hk8v
— ANI (@ANI_news) November 20, 2015 பின்னர் 2வதாக லாலுவின் இளையன் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் பதவியேற்றார். இதன் மூலம் அவர் துணை முதல்வராவது உறுதி செய்யப்பட்டது.
3வதாக லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப், அவரைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றார். இதில் தேஜ்பிரதாப் பதவி பிரமாணத்தை தவறாகப் படிக்த்தால் ஆளுநர் குறுக்கிட்டு மீண்டும் ஒருமுறை பதவி பிரமாணத்தை வாசிக்க செய்தார்.
Tej Pratap Yadav takes oath of office in Nitish Kumar's cabinet. He makes an error & is asked to repeat oath pic.twitter.com/7vC5xHAmjp
— ANI (@ANI_news) November 20, 2015 மேலும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளத்ரியும் அமைச்சராக பதவியேற்றார். மொத்தம் நிதிஷ்குமார் உட்பட 28 பேர் பதவியேற்றனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications