புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நீலிமா, தம்பதியர் ஒற்றுமைக்கு அற்புதமான மூன்று விஷயங்களைக் கூறினார். சின்னத்திரை, பெரிய திரை என்று ஒரு வலம் வந்த பிறகு தான் காதலித்த பையனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இருப்பினும் தொழில் பக்தி காரணமாக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலம் தள்ளிப் போட்டும் இருந்தார்.
விஜய் டிவியின் நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு முறை இவரும் கலந்துகொண்டு சின்னத்திரை நடிகர்களுக்கான வாய்ப்புக்கள் குறித்து பேசினார். அப்போதுதான் திருமணம் ஆகியிருந்த சமயம்.

வாய்ப்பில்லை
சின்னத்திரையில வாய்ப்பு கேட்டு போனா, திருமணமான நடிகையா, அப்படின்னா வேண்டாம்பான்னு சொல்லிடுவாங்க. என்ன காரணம்னு பார்த்தா, இது மெகா சீரியல், இவங்க உடனே கர்ப்பமாயிருவாங்க.. வயித்துல குழந்தை இருக்கும்போது சீன்ஸ் சூட் செய்வது கஷ்டம்னு வாய்ப்பு தர மாட்டாங்க. உடனே குழந்தை பெத்துக்குவோம்னு யார் சொன்னா, நீங்களே ஏன் முடிவு பண்றீங்கன்னு கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.

செய்தார்.
சொன்னது போலவே காதல் சில வருடம், கல்யாணமாகி சில வருடங்கள் என்று கழித்து கடந்த இரு வருடம்தான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஒற்றுமைக்கு
சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்யில் இமான் அண்ணாச்சியிடம் பேசியபோது, கணவன் மனைவி ஒற்றுமைக்கு மூன்று விஷயங்களை யதார்த்தமாக கூறினார்.
என்னைவிட நீ அதிகமா சம்பாதிக்கறேன்னு கணவன் மனைவியுடன் ஈகோ பார்க்க கூடாது, உன்னைவிடா நான் அதிகமா சம்பாதிக்கறேன்னு மனைவி கணவனைக் குத்தி காண்பிக்க கூடாது. எல்லாம் நமக்குத்தானே..

வேலை
நான்தான குடும்பத்துக்கு அதிகம் உழைக்கிறேன்...நீ சும்மா என்று கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ சாதாரணமாக எடைப்போட்டுவிடக் கூடாது.

ஆதரவாக
உனக்கு கஷ்டம் வரும்போது நான் இருக்கிறேன், எனக்கு கஷ்டம் வரும்போது நீ பார்த்துக்கொள் என்று இருவரும் புரிதலுடன் இருக்க வேண்டும் என்கிறார். ஈகோதான்மா எல்லார்கிட்டயும் இருக்கு, அதனாலதான் தூக்கிப் போட்டுட்டு போயிடறாங்கன்னு இமான் அண்ணாச்சி சொல்கிறார்.

ஈகோதான் தாலி
அப்படீன்னா அவங்களுக்கு கல்யாணமே வேண்டாம், ஈகோவை தாலியா கட்டிக்கிட்டு வாழ வேண்டியதுதான் என்று நீலிமா சிரித்துக்கொண்டே சொன்னார் .. அதை விடுங்க. அது என்ன நீலிமான்னு கேட்டா, நீலிமா என்பது அம்மனின் பெயராம். நல்லதும்மா.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்











Click it and Unblock the Notifications