For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி கற்பழிப்பு வழக்கு: ட்விட்டரில் கொந்தளிக்கும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

Delhi gangrape verdict: Twitter abuzz with reactions of common man
டெல்லி: டெல்லியில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் குற்றவாளிகளே என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறித்து ட்விட்டரில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி மைனர் உள்பட 6 பேரால் கற்பழித்து கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் பேருந்து ஓட்டுனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பேருந்து ஓட்டுனரான ராம் சிங் டெல்லியில் உள்ள திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில் மீதமுள்ள 4 பேரும் குற்றவாளிகளே என்று இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ட்விட்டரில் ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை பார்ப்போம்.

ஹெச் ஆர் வெங்கடேஷ்

விரைவான தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதே போன்று கற்பழிப்பு வழக்குகளில் நீதியை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் விரைவில் நியாயம் கிடைக்கும் என்றும் நம்புவோம்.

அனுபம் கேர்(இந்தி நடிகர்)

நிர்பயாவின் தந்தையை டிவியில் பார்த்தேன். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதையே அவர் விரும்புகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து தந்தைகளும் அவர் விருப்பத்தை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கர்னல் அபய் ரிஷி

அவர்களுக்கு மரண தண்டனை அளித்து அதை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். மேல் முறையீடு செய்ய அனுமதிக்கவே கூடாது.

ஷீத்தல்

தற்போது அந்த பெண் அமைதியடைவார்.

காவேரி சந்திரசேகர்

டெல்லி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை அளியுங்கள்.

சுனைனா அலுவாலியா

டெல்லி கற்பழிப்பு வழக்கு - அனைவரும் குற்றவாளிகள் ஆனால் தீர்ப்புக்காக நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அசித்

சட்ட சீர்திருத்தம் வேண்டும். வழக்கறிஞர்களின் மனம் மற்றும் நீதிநெறிகள் தூய்மை அடைய வேண்டும். நான் ஒரு வழக்கறிஞர் இருந்தும் இதை கூறுகிறேன்.

English summary
The much awaited verdict is finally out. The fast-track court in Delhi has convicted all four men for the rape and murder of a 23-year-old paramedical student, in a moving bus. Twitter is buzzing with the rage, relief and hope for the verdict and for India's judicial system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X