வடகிழக்கு மாநிலங்கள் பிடிக்குமா? அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க!
டெல்லி: துணை ராணுவப்படையின் ஒரு பிரிவான 'அசாம் ரைபிள்ஸ்' படைப்பிரிவில் 95 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இதில் பணியாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வரும் 22ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியா மொத்தம் 7 துணை ராணுவ படைகளை கொண்டிருக்கிறது. இதில் 'அசாம் ரைபிள்ஸ்' படைப்பிரிவுதான் இருப்பதிலேயே மிகவும் பழமையான படைப்பிரிவாகும். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் 1835ம் ஆண்டு இந்த படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர். இப்படைப்பிரிவுக்கு 'அசாம் ரைபிள்ஸ்' எனும் பெயர் 1917ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பிரிவின் பிரதான நோக்கம் நாட்டின் வடகிழக்கு பகுதிகளை பாதுகாப்பதாகும்.
1951ம் ஆண்டு சீனா திபெத்தை வலுக்கட்டாயமாக தனதாக்கிக்கொண்டபோது அந்நாட்டின் படைகள் இந்தியாவை நோக்கி மேலும் முன்னேறி வராமல் தடுக்க அருணாச்சலத்தில் அசாம் ரைபிள்ஸ்' பாதுகாப்புப் பணியை மேற்கொண்டன. இந்த படையில் தற்போது மொத்தம் 65 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் தரைப்படையின் லெப்டினண்ட் ஜெனரல்தான் தலைமை இயக்குநராக செயல்படுகிறார்.

காலிப்பணியிடங்கள்
இந்நிலையில், தற்போது சுமார் 95 இடங்கள் இப்படையில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ரைபிள்மேன் ஜெனரல் டியூட்டி (GD), ஹவில்தார் கிளார்க், வாரண்ட் ஆபீசர் ஆர்எம், வாரண்ட் ஆபீசர் டிராஃப்ட்ஸ்மேன், ரைபிள்மேன் ஆர்மர், ரைபிள்மேன் என்ஏ, ரைபிள்மேன் பிபி, ரைபிள்மேன் கார்ப், ரைபிள்மேன் குக், ரைபிள்மேன் சஃபாய், ரைபிள்மேன் டபிள்யூஎம் ஆகிய பதவிகளுக்கு காலி இடங்கள் இருக்கின்றன. இதில் ரைபிள்மேன் ஜெனரல் டியூட்டி (GD) பதவிக்கு மட்டும் சுமார் 81 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

கல்வி மற்றும் வயது
மற்ற பதவிகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே இருக்கின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை படித்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாது பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்த அளவில், 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியின்படி, ரைபிள்மேன் ஜெனரல் டியூட்டி (GD), ஹவில்தார் கிளார்க், வாரண்ட் ஆபீசர் ஆர்எம், வாரண்ட் ஆபீசர் டிராஃப்ட்ஸ்மேன் போன்ற பணியிடங்களுக்கு 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 18-23 வயது வரை இருக்க வேண்டும். இதில் SC/ ST /OBC/PWD/ PH விண்ணப்பதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் பொருந்தும்.

தேர்வு செய்யும் முறை
விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்து, திறன் அறிவு தேர்வு நடத்தப்படும். இவர்களின் சான்றிதழ்கள் மற்றும் உடல் தகுதி சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க https://www.assamrifles.gov.in/english/ எனும் இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து Directorate General Assam Rifles (Recruitment Branch), Laitkor, Shillong, Meghalaya - 793010. எனும் முகவரிக்கு வரும் 22ம் தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் நாட்டின் எந்த மூலையில் வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னுரிமை
முன்னதாக அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்ட போது பல்வேறு இளைஞர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். ஆனால், மத்திய அரசு இதில் பணியாற்றுபவர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது. அதன்படி, அக்னிபாத் திட்டத்தின் கீழ் 'அக்னி வீரர்களாக' பணியாற்றியவர்களுக்கு 'அசாம் ரைபிள்ஸ்' படைப்பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications