மாதம் ரூ.55,000 ஊதியம்.. பெல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. சூப்பர் வாய்ப்பு
பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பெல் (BEL or Bharat Electronics Limited) நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பபபட உள்ளது. 32 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்/ BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
பெல் நிறுவனத்தில் மொத்தம் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ப்ராஜெக்ட் என்ஜினீயர் -I பிரிவில் 32 பணிகள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது என்ஜினீயரிங் கல்லூரியில் சம்பந்தப்பட்ட பிஇ, பிடெக் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன் அல்லது மெக்கானிக் துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயதானது 01.12.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.

மாத ஊதியம் எவ்வளவு?
இது ஒப்பந்த பணி என்பதால் ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.40,000, 2வது ஆண்டு ரூ.45,000, 3வது ஆண்டு ரூ.50,000, 4வது ஆண்டு ரூ.55,000 ஊதியமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பதவியை பொறுத்தமட்டில் 3 ஆண்டு ஒப்பந்த பணி வழங்கப்படும். தேவையெனில் 4வது ஆண்டு தொடரப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் www.bel-india.in எனும் இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை DGM (HR/MR,MS&ADSN), Bharat Electronics Limited, Jalahalli P.O., Bengaluru 560013 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தாப்ல மீது Application for Project Engineer I என குறிப்பிட வேண்டும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்ப கட்டணமாக 18 சதவீத ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.472 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய் Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications