ரூ.62,000 சம்பளம்.. 8 முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு.. சென்னை கண்டோன்மென்ட் போர்டில் வேலை!
சென்னை: சென்னையில் உள்ள கண்டோன்மென்ட் போர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8, 10, 12, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கண்டோன்மென்ட் போர்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் கண்டோன்மென்ட் போர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சென்னை கண்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னை கண்டோன்மென்ட் போர்டில் மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி எலக்ட்ரிக்கல் ஹெல்பர், லோவர் டிவிசன் கிளர்க், நர்சிங் ஆர்டர்லி, மேசன், பிளம்பரம், மிட்வைப், லட்சி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சாபாய்வாலா பணிக்கு 10 பேரும், ஆயா பணிக்கு 2 பேரும், வாட்ச்மேன் பணிக்கு 5 பேரும், செகன்டரி கிரேட் அசிஸ்டென்ட் (டீச்சர்) பணிக்கு 4 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
எலக்ட்ரிக்கல் ஹெல்பர், மேசன், பிளம்பர் பணிக்கு ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். லோவர் டிவிசன் கிளர்க் பணிக்கு டிகிரியும், செகன்டரி கிரேட் அசிஸ்டென்ட் (டீச்சர்) பணிக்கு 12 அல்லது டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும். சபாய்வாலா, ஆயா, லட்சி, வாட்ச்மேன் பணிக்கு 8 ம் வகுப்பும், நர்சிங் ஆர்டர்லி பணிக்கு 10ம் வகுப்பும் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தப்பட்சம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிஎச், 3ம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்யும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படும். அதன்படி எலக்ட்ரிக்கல் ஹெல்பர் பணிக்கு மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையும், லோவர் டிவிசன் கிளர்க் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000, நர்சிங் ஆர்டர்லி பணிக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேசன், பிளம்பர், மிட்வைப், சபாய்வாலா, ஆயா, லட்சி, வாட்ச்மேன் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், செகன்டரி கிரேட் அசிஸ்டென்ட் (டீச்சர்) பணிக்கு மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையும் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://stm.cantt.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் ‛The Chief Executive Officer, Cantonment Board, St Thomas Mount cum Pallavaram, North Parade Road, St.Thomas Mount, Chennai - 600 016, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் இந்த முகவரிக்கு பிப்ரவரி மாதம் 28 ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications