அட சூப்பர்.. மாதம் ரூ.56,000 முதல் ரூ.78,000 வரை சம்பளம்.. சென்னையில் வேலை வேண்டுமா? இத படிங்க முதல்ல
சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.78,800 வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் இந்தியாவின் பல்வேறு இயங்கி வருகின்றனர்.
அதன்படி சென்னை கிண்டியில் மத்திய பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனம் (Central Institute of Petrochemicals Engineering & Technology or CIPET) செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எத்தனை?
சென்னையில் மத்திய பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனத்தில் மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி மேனேஜர் (டெக்னிக்கல்) பிரிவில் 4, சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பிரிவில் 6, டெக்னிக்கல் ஆபிசர் பிரிவில் 10, மேனேஜர் (P& A) பிரிவில் ஒன்று என மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பணிக்கு வயது வரம்பு என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேனேஜர் (டெக்னிக்கல்), மேனேஜர் (P & A)பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 40 வயதுக்குள்ளும், டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
வயது வரம்பை போல் ஒவ்வொரு பணிக்குமான சம்பளமும் வேறுபடுகிறது. அதன்படி மேனேஜர் (டெக்னிக்கல்), மேனேஜர் (P & A)பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.78,800 சம்பளமாக கிடைக்கும். சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு ரூ.67,700ம், டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு ரூ.56,100ம் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
மேனேஜர் (டெக்னிக்கல்), சீனியர் டெக்னிக்கல் ஆபிசர், டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மெக்கானிக்கல், பாலிமர் டெக்னாலஸி மற்றும் வேதியியல் துறை சார்ந்து எம்இ, எம்டெக் அல்லது பிஎச்டி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேனேஜர் (P & A) பணியை விரும்புபவர்கள் எம்பிஏ, Public Administration பிரிவில் பட்டமேற்படிப்பு அல்லது டிப்ளமோ பிரிவில் பட்டய மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டியது அவசியமாகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து அதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களுடன் ‛‛Director (Administration), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032'' என்ற முகவரிக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அனுப்பும் போது பணி தொடர்பான விளம்பர எண் மற்றும் தேதியை கட்டாயமாக குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
-
சேலம் மாவட்டத்தில் வேலை.. 197 காலியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு முடிச்சவங்க விட்றாதீங்க! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications