தயாரா? 10 முடித்தவர்களா நீங்கள்! மாதஊதியம் ரூ.69,000.. உளவுத்துறையில் 1671 பணியிடம்..தேதி நீட்டிப்பு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உளவுத்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.69 ஆயிரத்துடன் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியான நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஐபி (Inteligence Bureau)எனும் உளவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த உளவுப்பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடங்கள் -கல்வி தகுதி என்ன?
உளவுப்பிரிவில் மொத்தம் 2 பிரிவுகளில் 1671 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Security Assistant/Executive பிரிவில் 1521 பேரும், Multi Tasking Staff/General பிரிவில் 150 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய் விரும்புவோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்திருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு மாநிலத்தின் மொழியில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
Security Assistant/Executive பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். Multi Tasking Staff/General பணியில் சேர விரும்புவோர் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரைம், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரை வயது தளர்வு உண்டு. பிற பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயது தளர்வுகள் உண்டு.

சம்பளம் என்ன?
இதில் Security Assistant/Executive பிரிவில் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.21 ஆயிரத்து 700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். மேலும் Multi Tasking Staff/General பிரிவில் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வோருக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு ஆப்லைன் முறையில் லோக்கல் மொழியின் அறிவை அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பம் கட்டணமாக ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mha.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்யும்போது உரிய ஆவணங்கள், போட்டோக்களை அப்டேட் செய்ய வேண்டும். 2022 நவம்பர் 25ம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இணையதள பிரச்சனையால் தற்போது விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் பதிவுகளை ஜனவரி 28 ம் தேதி முதல் பிப்ரவரி 17 ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
தேதி நீட்டிப்பு செய்யப்பட்ட அறிவிப்பை காண Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் வழியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications