For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கியில் பணி செய்ய வாய்ப்பு.. என்ஜினியரீங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கைநிறைய சம்பளம்

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) சார்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கைநிறைய சம்பளம் கிடைக்கும் இந்த பணிக்கு என்ஜினீயரிங் முடித்தவர்களும், டிகிரி, சட்டப்படிப்பை முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS or ஐபிபிஎஸ்) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ஐபிபிஎஸ் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் தொகுத்து இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளன. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் படித்து அறிந்து பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

மாத ஊதியம் ரூ.55 ஆயிரம்.. சென்னையிலேயே மத்திய அரசு பணி.. நாளை கடைசிநாள்.. விண்ணப்பிக்க நல்ல வாய்ப்புமாத ஊதியம் ரூ.55 ஆயிரம்.. சென்னையிலேயே மத்திய அரசு பணி.. நாளை கடைசிநாள்.. விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு

 எந்தெந்த வங்கிகளில் பணி

எந்தெந்த வங்கிகளில் பணி

ஐபிபிஎஸ் சார்பில் தற்போது Specialist Officer பணியிடங்கள் பல்வேறு வங்கிகளில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரால் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் மற்றும் சின்ட் வங்கிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 காலியிடம் எவ்வளவு?

காலியிடம் எவ்வளவு?

ஐபிபிஎஸ் சார்பில் Specialist Officer பிரிவில் Agricultural Field Officer பணிக்கு 516 பேர், Marketing Officer பணிக்கு 100 பேர், Law Officer பணிக்கு 10 பேர், IT officer பணிக்கு 44 பேர் Rajbhasha Adhikari பணிக்கு 25 பேர், HR/Personnel Officer பணிக்கு 15 பேர் என மொத்தம் 720 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் 2.11.1992ம் தேதிக்கு முன்பும், 01.11.2002க்கு பின்பும் பிறந்திருக்க கூடாது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் மற்றவர்களுக்கு அரசு விதிகளின் படியும் வயது தளர்வும் உண்டு.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Agricultural Field Officer பணிக்கு Agriculture, Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, Fishery Sciene அல்லது இது சார்ந்த படிப்புகளை படித்திருக்க வேண்டும். Marketing Officer பணிக்கு எம்எம்எஸ் (மார்க்கெட்டிங்), எம்பிஏ (மார்க்கெட்டிங்) படித்திருக்க வேண்டும். Law Officer பணிக்கு சட்ட படிப்பையும், Rajbhasha Adhikari பணிக்கு இந்தி, ஆங்கிலம் பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். IT officer பணிக்கு என்ஜினீயர், கம்ப்யூட்டர், ஐடி பிரிவில் டிகிரி, எலக்ட்ரானிக்ஸஅ அன்ட் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமெண்டெசன் படிப்பு அல்லது தொடர்புடைய பிரிவில் பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும்.HR/Personnel Officer பணிக்கு 15 Personnel Management, Industrial Relations, Labour Law படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத. கட்டணத்தை ஆன்லைனில் விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஐபிபிஎஸ் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கடைசி நாள் என்ன?

கடைசி நாள் என்ன?

விண்ணப்பம் செய்யும்போது உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்டேட் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 21ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு சம்பளம் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
The Bank Staff Selection Board (IBPS) is going to fill up a large number of vacancies in various categories. Anyone who has completed engineering, degree or law degree can apply for this job which offers a generous salary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X