For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்வு கிடையாது.. இஸ்ரோவில் பணி செய்ய ஆசையா? அதுவும் திருநெல்வேலியில்.. சூப்பர் வாய்ப்பு!

திருநெல்வேலி மாவட்டம் இஸ்ரோ ப்ரொபல்ஷன் வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மகேந்திரகிரியில் இஸ்ரோ உந்தும வளாகத்தில் (ISro Propulsion Complex) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு எதுவுமின்றி வெறும் நேர்க்காணல் முறையில் தான் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் டிகிரி முடித்தவர்கள் நேர்க்காணலில் பங்கேற்பதன் மூலம் இந்த பணியை பெற முடியும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மகேந்திரகிரியில் இஸ்ரோ உந்தும வளாகம் (ISro Propulsion Complex) செயல்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரவ எரிபொருள், கிரையோனிக் என்ஜின் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ உந்தும வளாகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. அதன் விபரம் வருமாறு:

தட்டி தூக்கலாம்.. 10 முடித்தாலே போதும்.. மாத ஊதியம் ரூ.63,000..ராணுவ ஆர்டினன்ஸ் கார்ப்ஸில் நல்ல பணிதட்டி தூக்கலாம்.. 10 முடித்தாலே போதும்.. மாத ஊதியம் ரூ.63,000..ராணுவ ஆர்டினன்ஸ் கார்ப்ஸில் நல்ல பணி

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இஸ்ரோ உந்தும வளாகத்தில் மொத்தம் 3 பிரிவுகளில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Graduate, Technician and Graduate (Non Engineering) என்ற 3 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு என்ஜினீயரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரிப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிராசுவேட் பணிகள்

கிராசுவேட் பணிகள்

அதன்படி Graduate Apprentice பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிக்கு தலா 10 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், கம்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பணிக்கு தலா 5 பேர், சிவில் என்ஜினீயரிங் பணிக்கு 4 பேர், இன்ஸ்ரூமென்டல், கெமிக்கல் பணிக்கு தலா 2 பேர் லைப்ரேரி சயின்ஸ் பணிக்கு தலா 3 பேர் என மொத்தம் 41 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இது apprentice வகை பணி என்பதால் மாதம் ரூ.9 ஆயிரம் Stipend வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
லைப்ரேரி சயின்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் லைப்ரேரி சயின்ஸ், லைப்ரோி & இன்பர்மேஷன் சயின்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 டெக்னீசியன் பிரிவு

டெக்னீசியன் பிரிவு

Technician Apprentice பணிக்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு 15 பேர், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு தலா 10 பேர், சிவில் என்ஜினீயரிங் பணிக்கு 5 பேர், கெமிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு 4 பேர் என மொத்தம் 44 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கும் மாதம் Stipend முறையில் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். இவர்களும் சம்பந்தப்பட்ட பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 கிராசுவேட் (Non Engineering)

கிராசுவேட் (Non Engineering)

Graduate Apprentice (Non Engineering) மொத்தம் 15 பணிகள் காலியாக உள்ளன. பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வரை Stipend வழங்கப்படும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

Graduate Apprentice (Non Engineering) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 11.02.2023 என்ற தேதியின் அடிப்படையில் வயது வரம்பு கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் மற்றவர்களுக்கு அரசு விதிகளின்படியும் வயது தளர்வு உண்டு.

 நேர்க்காணல் மட்டுமே

நேர்க்காணல் மட்டுமே

இந்த பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கானது தான். பணிக்கு தேர்வு எதுவும் கிடையாது. நேர்க்காணல் மட்டுமே நடக்கும். இந்த பணிகளுக்கான நேர்க்காணல் அனைத்தும் பிப்ரவரி 11ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடக்கும். விருப்பம் உள்ளவர்கள் www.iprc.gov.in இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு பிப்ரவரி 11ல் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

English summary
Indian Space Research Organization (ISRO) has issued a notification to fill various vacancies in ISRO Propulsion Complex at Mahendragiri near Radhapuram in Tirunelveli district in Tamil Nadu. These posts will be filled only through interview without any selection. Engineering and degree completion candidates can get this job by participating in the interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X