For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.25,000-ரூ.2 லட்சம் ஊதியம்..மத்திய அரசு பள்ளியில் 13,404 காலிப்பணியிடம்.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா சங்கதன் பள்ளியில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை பெற முடியும்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கேந்திரியா வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan) செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பணிகள் காலியாக உள்ள

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

ஒரு வயது பிஞ்சு குழந்தை.. உயிருடன் விழுங்கிய முதலை.. தந்தை கண் முன் கொடூரம்! பதற வைக்கும் ஃபோட்டோஒரு வயது பிஞ்சு குழந்தை.. உயிருடன் விழுங்கிய முதலை.. தந்தை கண் முன் கொடூரம்! பதற வைக்கும் ஃபோட்டோ

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

கேந்திரிய வித்யாலயா சங்கதனில் மொத்தம் 13,404 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி தொடக்க பள்ளி ஆசிரியர் 6,414, உதவி ஆணையர் 52, முதல்வர் 239, துணை முதல்வர் 203, முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) 1409, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) 3,176, நூலகர் 355, தொடக்க கல்வி ஆசிரியர் (மியூசிக்) 303, நிதி அலுவலர் 6, உதவி என்ஜினியர் (சிவில்) 2, உதவி செக்சன் அலுவலர் 156, இந்தி மொழிப்பெயர்ப்பாளர் 11, சீனியர் செயலக உதவியாளர் 322, ஜூனியர் செயலக உதவியாளர் 702, ஸ்டென்னோ கிராபர் கிரேடு - II 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

மொத்தமுள்ள 13,404 பணிக்கும் தனித்தனி கல்வி தகுதிகள் உள்ளன. அதன்படி பிஎட், எம்எட், டிகிரி, பட்டமேற்படிப்பு உள்பட தொடர்புடைய படிப்புகளை மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

தொடக்க பள்ளி ஆசிரியர், தொடக்கபள்ளி ஆசிரியர் பணி (மியூசிக்) 30 வயது, முதல்வர் பதவிக்கு குறைந்தபட்சம் 35 வயதும், அதிகபட்சம் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். துணை முதல்வர் பதவிக்கு 45 வயது, முதுகலை பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் , நூலகர், நிதி அலுவர், உதவி என்ஜினியர் (சிவில்), உதவி செக்சன் அலுவலர், இந்தி மொழிப்பெயர்பாளர் பணிக்கு 35 வயது, சீனியர் செயலக உதவியாளர் பணிக்கு 30 வயது, Stenographer Grade II பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத ஊதியம் எவ்வளவு?

மாத ஊதியம் எவ்வளவு?

தொடக்கபள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளமாக கிடைக்கும். உதவி ஆணையர், முதல்வர், பணிக்கு ரூ. 78, 800 முதல் ரூ.2.09 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். துணை முதல்வர் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1.17 லட்சம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1.51 லட்சம், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. நூலகர், நிதி அலுவர், உதவி என்ஜினியர் (சிவில்)பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம், உதவி செக்சன் அலுவலர் பணிக்கு, ஸ்ட்டென்னோ கிரேடு II பணிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100ம் மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் டிசம்பர் 5ம் தேதி முதல் விண்ணப்பம் செய்ய முடியும்.

தொடக்கபள்ளி ஆசிரியர் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பிற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

English summary
Central Government Kendriya Vidyalaya Sangathan School has released a notification to fill 13,404 vacancies. Eligible and willing candidates can apply for a job with a salary of Rs.25 thousand to Rs.2 lakh per month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X