தேர்வு கிடையாது.. கைநிறைய சம்பளம்.. நறுமண பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு.. கேரளாவில் தான் பணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இயங்கி வரும் நறுமண பொருட்கள் வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நறுமண பொருட்கள் வாரியம் (Spices Board) செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் தற்போது காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

நறுமண பொருட்கள் வாரியத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Technical Assistant) பணி காலியாக உள்ளது. இதற்கு முதுகலை பிரிவில் வேதியியல் (Chemistry) படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

 Kerala Spices Board recruitment 2022 for Technical Assistant

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில் உள்ள ICRIல் பணியமர்த்தப்படுவார்கள். மாத சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்கப்படும்.

பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. இந்த பணியும் ஒப்பந்த அடிப்படையில் தான் நிரப்பப்பட உள்ளது. நேர்க்காணலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் உரிய சான்றுகளுடன் Indian Cardamom Research Institute (ICRI), Spices Board, Myladumpara, Idukki District, Kerala 685 553 (Ph: 04868-237206, 237207) என்ற முகவரிக்கு டிசம்பர் 20 அதிகாலை 10 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்று பயன்பெறலாம்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்க்காணலுக்கு எடுத்து செல்ல வேண்டும். பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இங்கு Click Here கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+