மாத ஊதியம் ரூ.16,000 டூ ரூ.52,000.. தேர்வும், நேர்க்காணலும் இல்லை..எம்ஆர்பியில் சூப்பர் வேலை! ரெடியா?
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 335 தியேட்டர் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வு மற்றும் நேர்க்காணல் என்பது இல்லை. விண்ணப்பம் செய்யும் நபர்கள் பணிக்கு தேர்வாகும் நிலையில் அவர்களுக்கு மாதம் ரூ. ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியை மருத்துவம பணியாளர் தேர்வு வாரியம் (Medical Service Recruitment Board or MRB) மேற்கொண்டு வருகிறது. இதன் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் இயங்கி வருகிறது.
இந்த வாரியம் சார்பில் தற்போது தியேட்டர் அசிஸ்டென்ட் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணி தொடர்பான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடம்- மாத சம்பளம் எவ்வளவு?
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தியேட்டர் அசிஸ்டென்ட் பிரிவில் மொத்தம் 335 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.52,400 வரை வழங்கப்பட உள்ளது. இருப்பினும் இது தற்காலியாக பணி என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதுக்குள்ளும், அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செயப்படவில்லை.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தியேட்டர் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல் படிப்பை முடித்து தியேட்டர் டெக்னீசியன் ஓராண்டு சான்று படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக பிப்ரவரி மாதம் 23ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு, நேர்க்காணல் எதுவும் கிடையாது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications