இனி இந்தி, ஆங்கிலத்துடன் 13 மாநில மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் ஆட்சேர்ப்பு தேர்வு
டெல்லி: 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இனிமேல் விளம்பரப்படுத்தப்படும் காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இனிமேல் விளம்பரப்படுத்தப்படும் காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியாளர்களுக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து ஆராய மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை ஐபிபிஎஸ்-ஆல் தொடங்கப்பட்ட தேர்வு செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது.
உள்ளூர் இளைஞர்களுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பை வழங்குவதோடு உள்ளூர்,பிராந்திய மொழிகள் மூலம் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த குழு செயல்பட்டது. பிராந்திய மொழிகளில் எழுத்தர் தேர்வுகளை நடத்தும் இந்த முடிவு எதிர்கால பாரத ஸ்டேட் வங்கி காலியிடங்களுக்கும் பொருந்தும்.
ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்ட மற்றும் ஆரம்பத் தேர்வுகள் நடைபெற்ற காலியிடங்களுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய ஆட்சேர்ப்பு செயல்முறை விளம்பரத்தின் படி நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications