RRB ALP: ரயில் டிரைவர் ஆகணுமா? வந்தாச்சு உதவி லோகோ பைலட் அறிவிப்பு! 11,127 பணியிடங்கள்.. பட்டைய கிளப்புங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் (RRB ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தமாக 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 63 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இந்தியன் ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு வேலை, கை நிறைய சம்பளம், சலுகைகள் என ரயில்வே ஊழியர்களுக்கு ஏராளமான வசதிகள் கிடைப்பதால் ரயில்வே வேலை கிடைத்தால் போதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.

11,127 காலிப்பணியிடங்கள்
இதனால் ரயில்வேயில் எப்படியாவது வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் தேர்வர்கள் தீவிரமாக படித்து வருகிறார்கள். ரயில்வே தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அறிவிப்பு ஒன்றை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ரயில்வே உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 11,127 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
கல்வித் தகுதி:
ரயில்வே லோகோ பைலட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ் காணும் கல்வித் தகுதியை பெற்று இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
ஐடிஐ-யில் எலக்ட்ரீஷியன், மெக்கானிக் , எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மில் ரைட் / மெயிண்டனன்ஸ் மெக்கானிக், வைர்மேன், டிராக்டர் மெக்கானிக், ஆர்மேச்சர் & காயில் வைண்டர், மெக்கானிக், ரெஃப்ரிஜரேஷன் & ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், ஹீட் என்ஜின் (Heat Engine), டர்னர் மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அல்லது 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என் ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை முடித்தவர்களை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்காலம்.
வயது வரம்பு:
உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் லோகோ பைலட்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை எப்படி?
தேர்வு முறையை பொறுத்தவரை சிபிடி எனப்படும் கணினி வழி தேர்வு நடைபெறும். சிபிடி 1, சிபிடி2 மற்றும் சிஏபிடி எனப்படும் கணினி அடிப்படையிலான அப்டிடியூட் தேர்வுக்குக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியாணைக்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனையும் நடைபெறும். முதல் இரண்டு கட்ட தேர்வு (சிபிடி) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் என 15 மொழிகளிலும் நடைபெறும். சிபிஎடி தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். SC/ST/பெண்கள்/EBC/PwBD/ ம் - ரூ.250/- செலுத்த வேண்டும். தேர்வு எழுதியதும் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். www.rrbapply.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு மாதம் இருப்பதால் தேர்வர்கள் தற்போதே படிக்க தொடங்கினால் ரயில்வே உதவி லோகோ பைலட் வேலையை லட்டு மாதிரி தூக்கலாம்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications