For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 1089 அரசு பணி.. நிலஅளவையர், வரைவாளர், உதவி வரைவாளருக்கான தேர்வை அறிவித்த டிஎன்பிஎஸ்சி!

Google Oneindia Tamil News

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் என மொத்தம் 1,809 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : 7,301 அரசு காலி பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்! டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : 7,301 அரசு காலி பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்!

 1089 பணியிடங்கள்

1089 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி சார்பில் நில அளவையர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman), உதவி வரைவாளர் (Surveyor Cum Draughtsman) என மொத்தம் 1089 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நில அளவையர் பணிக்கு 798 பேர், வரவைாளர் பணிக்கு 236 பேர், உதவி வரைவாளர் பணிக்கு 55 பேர் என மொத்தம் 1089 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 மாத சம்பளம்-வயது வரம்பு எவ்வளவு?

மாத சம்பளம்-வயது வரம்பு எவ்வளவு?

இவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை கிடைக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நில அளவையர், மற்றும் வரைவாளர், உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்) மற்றும் பிசிஎம், கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

மேலும் நிலஅளவையர், வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட தொழில் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்களாக இருப்பது அவசியம். உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் டிராப்மேன் ஷிப்(சிவில்) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் 27 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பத்துக்கான பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, கணவரை இழந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

 எழுத்து தேர்வு எப்போது?

எழுத்து தேர்வு எப்போது?

இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் 3 ம் தேதி வரை விண்ணப்ப திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு 06.11.2022ல் எழுத்து தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
TNPSC has announced the recruitment for a total of 1,809 posts of Land Surveyor, Draftsman and Assistant Draftsman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X