Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | அவர்வயின் விதும்பல் | காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் திருக்குறள்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு

என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
— மு. வரதராசன்

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்
— கலைஞர்

என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
— சாலமன் பாப்பையா

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்ட பின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலைநோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்
— புலியூர்க் கேசிகன்

காணும் பொழுதே காமத்துடன் கனை தொடுப்பவரை கண்ணாரக் கண்டபின் நீங்கிவிடும் எனது மெல்லிய தோளில் தோன்றிய பசப்பு.
— சிவயோகி சிவகுமார்

என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.
— மணக்குடவர்

(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.).
— பரிமேலழகர்

English Couplet:

O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.

Couplet Explanation:

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

Transliteration (Tamil to English):

kaankaman konkanaik kannaarak kandapin
neengum-en men-dhoal pasappu

மொத்தம் 133 அதிகாரங்கள்
1265 of 1330

மேலும் அவர்வயின் விதும்பல் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+