For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனவு காணுங்கள்.. குட்டீஸ்களுக்கு சொல்லிக் கொடுங்க அம்மாக்களே, அப்பாக்களே!

Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் ஜனாதிபதி என போற்றப்பட்டவர் நமது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லிக் கொண்டே இருந்தவர் கலாம்.

இன்று எத்தனை பேர் கனவு காணுகிறோம்.. எல்லோர் கையிலும் கனவுக்குப் பதில் கம்ப்யூட்டரும், செல்போனும் தான் நிறைந்து வழிகிறது. இதுவா வளர்ச்சியின் பாதை.. நிச்சயம் இருக்க முடியாது.

all-kids-should-dream-to-reach-the-new-heights

மாறாக அனைவரிடமும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அதை உருவாக்கி அதை நனவாக்கும் வகையில் நமது கனவுகள் திட்டமிடல்கள் இருக்க வேண்டும். கனவு கண்டால் மட்டும் போதுமா.. இல்லை.. அதை நிறைவேற்றத் தேவையான முயற்சி இருக்க வேண்டும். சரியான முயற்சிக்கு நல்ல பயிற்சியும் கூடவே இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு உண்டு. சில பேருக்கு நான் டாக்டராவேன் இன்ஜினியராவேன் என்றும் ஒரு சிலருக்குத் தான் அம்பானியாவது போன்று கனவுகள் வரும். கனவுகள் என்பது நம் ஆழ்மனதின் வெளிப்பாடே. நாம் மனதில் என்ன நினைத்துத் தூங்குகிறோமா அதுவே நமக்குக் கனவாக பிரதிபலிக்கிறது.

கனவு என்பது மனிதனுக்கு வாய்த்த ஓர் வரம். நம் குறிக்கோள்களை அடைய நம்மைத் தூண்டும் சக்தி கனவுகளுக்கு உண்டு. ஆடுவோமே பள்ளிப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று அன்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன் அவர் கண்ட கனவு நனவானது. அது போல நம் குழந்தைகளையும் பெற்றோர்கள் அவர்களைக் கனவுக் காணச் சொல்ல வேண்டும்.

கனவுகள் நம்மை உறங்க விடாமல் செய்யும். நம் இலக்குகளை அடைய உதவும். கனவு காணுங்கள் என்று எதிர்கால இந்தியாவான நம் குழந்தைகளைப் பார்த்துக் கலாம் அவர்கள் கூறினார்கள். உங்கள் பிள்ளைகளிடம் அவர்களது கனவு என்ன என்றுக் கேட்டு அதை அடைய அவர்களுக்கு வழிகாட்டுவதே சிறந்த பேரண்டிங்.

சும்மா பகல்கனவு காணாதே என்று உங்கள் குழந்தைகளிடம் கூறாமல் அவர்கள் அதை நனவாக்குவதற்கான வழிமுறைகளைக் கூறுங்கள் பெற்றோர்களே. குட்டீஸ் நல்லா கனவு காணுங்க கனவு மெய்படட்டும்.

English summary
Every kid should dream about his or her future and ambition as suggested by late Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X