Deepavali memes: தீபாவளிக்கு ஒரே செலவுதான்.. கிருஷ்ணர் பேசாம நரகாசூரனை மன்னிச்சு விட்ருக்கலாமோ
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. பண்டிகையை கொண்டாட பலரும் தயாராகி வருகின்றனர். புத்தாடை வாங்குவது தொடங்கி பட்டாசு, பலகாரம் என செலவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. பலரும் போனஸ் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்களின் எதிர்பார்ப்புகளை மீம்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். பண்டிகை கொண்டாடும் இந்த நேரத்தில் தீபாவளி மீம்ஸ்களை ரசித்து சிரியுங்கள் உங்கள் அன்பானவர்களுக்கும் வாழ்த்துக்களுடன் அனுப்பி வையுங்கள்.
நரகாசூரன் சம்ஹாரம் செய்யப்பட்ட நாளைத்தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், நரக சதுர்த்தசி என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. தனது தாயினால் மரணம் நேர வேண்டும் என்று பிரம்மாவிடம் நரகாசூரன் வேண்டிக்கொள்ள அந்த வரத்தை கொடுத்தார் பிரம்மா. ஆணவத்தில் ஆடிய நரகாசூரனை சத்யபாமா மூலம் வதம் செய்தார் கிருஷ்ணர் என்கிறது புராண கதை.
தீபாவளிக்கு அப்பா, அம்மாவின் பர்ஸ் பணம் முழுவதும் காலியாகும் அளவிற்கு செலவுகள் வரிசை கட்டி நிற்கும். புத்தாடை வாங்கும் போதே போட்ட பட்ஜெட் தாண்டிவிடும். பட்டாசு, பலகாரம், உறவினர் வீடுகளுக்கு செல்லும் செலவு, குழந்தைகளுக்கு கொடுக்கும் தீபாவளி காசு என சேர்த்து வைத்த பணம் முழுவதும் செலவாகி விடும். தீபாவளி முடிந்த பின்னர் அடுத்த பல நாட்களை நகர்த்துவதற்கு கையில் காசு தேவைப்படும். தீபாவளி செலவுகள், போனஸ், பட்டாசு வாங்கி வெடிப்பது போன்றவைகளை வைத்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். சில சுவாரஸ்ய மீம்ஸ்களை பார்க்கலாம்.

போனஸ் பரிதாபங்கள்
தீபாவளி வந்தாலே போனஸ் எப்போது வரும் என்று தனியார் அரசு துறைகளில் வேலை செய்பவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். அதில் பலர் போனஸ் வாங்கிக் கொண்டு வேறு கம்பெனிக்கு செல்ல தயாராகிவிடுவார்கள். கம்பெனி முதலாளிகளோ..கடைசி நாள் வரைக்கும் போனஸ் போடாமல் ஏமாற்றி விடுவார்கள். அவர்களுக்காக இந்த வேடிக்கையான மீம்ஸ்.

சொன்னா தாங்கமாட்டீங்க
3 மாத சம்பளம் போனஸ் ஆக வரும் என்று சிலரது எதிர்பார்ப்பாக இருக்கும் ஆனால் 1 மாதம் கூட போனஸ் பணம் கைக்கு வராது. வீட்டில் இருப்பவர்கள் ஒருவித எதிர்பார்ப்போடு இருக்க.. போனஸ் பத்தி சொன்னா தாங்க மாட்டீங்க என்று ஆனந்தம் படத்தின் மம்முட்டி டயலாக் சீனை டெம்ப்ளேட் போட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

சிவகாசி போங்கப்பா
கிப்ட் பாக்ஸ்ல எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சுர்ருன்னு சுத்தற சக்கரம் முதல் பூ பூவாய் தெறிக்கும் மத்தாப்பு மட்டுமல்லாது டமால் டுமீல் என வெடிக்கும் அதிரடி வெடிகளும் வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் நேராக சிவகாசிக்கே போங்கப்பா என்று தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் இந்த மீம்ஸ் பதிவர்

பட்டாசு மாசு
பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நீங்க சுற்றுச்சூழல் மாசு படும் என்றுதான் பட்டாசு வெடிப்பதில்லையா என்று ஒருவர் கேட்க..மாசாவது..கீசாவது..பட்டாசு விற்கிற விலையில வாங்க காசு இல்லை வாங்கலை என்று சொல்கிறார் இந்த மீம்ஸ் பதிவாளர்.

90 கிட்ஸ் தலை தீபாவளி
தீபாவளிக்கு முன்பு திருமணம் முடிந்த தம்பதிகள் பலர் தலை தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர். நமக்கு எப்போது கல்யாணம் நடக்கும்..நாமும் எப்போது தலை தீபாவளி கொண்டாடுவோம் என்று 90 கிட்ஸ் ஏங்கித் தவிக்கின்றனர். கடவுளிடம் போய்.. இந்த வருஷம் தலை தீபாவளி இல்லைன்னு ஆயிருச்சு.. அடுத்த வருஷமாவது நான் தலை தீபாவளி கொண்டாடுவேனா என்று கேட்பது போல ஒரு 90 கிட்ஸ் மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.

இன்னும் நாள் இருக்கே
தீபாவளி செலவுக்கு பணம் ரெடியாயிருச்சா என்று அவ்வப்போது மனைவி கேட்க..அதுக்குள்ள என்ன இன்னும் நாள் இருக்கே என்று கணவன் சொல்ல..அரசு படத்தில் இருந்து சரத் குமார் வடிவேலு காமெடி மீம்ஸ் டெம்ப்ளேட் ஆப்ட் ஆக பொருந்தி வருகிறது.

அட நீங்க வேற
கொஞ்சம் பந்தாவாக ஆடை உடுத்திக்கொண்டு போனால் போதும் ஏய் இந்தா பாரு.. போனஸ் வாங்கியாச்சு போல என்று பேசுவார்கள். அட நீங்க வேற நானே தீபாவளி செலவுக்கு எப்படி கடன் வாங்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்று மைன்ட் வாய்ஸ்சில் சொல்லிக்கொண்டு போய் கொண்டிருப்போம். அப்படித்தான் வடிவேல் டெம்ளேட் மீம்ஸ் பதிவிட்டுள்ளார் இந்த மீம் கிரியேட்டர்.

மன்னிச்சு விட்டுருக்கலாம்
தீபாவளிக்கு பல செலவுகள்..கூடவே புது பாத்திரங்கள் வாங்க வேண்டும் என்று புது செலவை இல்லத்தரசி இழுத்து வைப்பார். புது டிரஸ், பட்டாசு மட்டுமல்லாது பலகாரங்களையும் பார்த்து பார்த்து வாங்க வேண்டும். இப்படி செலவுகள் வருவதைப் பார்த்தால் பேசாமல் கிருஷ்ண பரமாத்மா நரகாசூரனை வதம் செய்யாமல் மன்னிச்சு விட்டிருக்கலாமோ என்று சொல்கின்றனர் இந்த மீம்ஸ் பதிவாளர்கள்.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications