மீம்ஸ் என்றால் கிண்டல் கேலிக்கு மட்டும்தானா.. நெட்டிசன்களின் சபாஷ் முயற்சி! #SaveFarmers

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : எதற்கெடுத்தாலும் கேலி செய்து மீம்ஸ் போடுபவர்களுக்கு மத்தியில் மீம்ஸை வைத்து விவசாயத்தை வளர்க்கும் தமிழ்நாடு மீம்ஸ்ன் விவசாயத்தை காப்போம் ஹேஷ்டேக் முயற்சி பாராட்டிற்குரியதே.

சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்ட காலம் போய் ஒருவர் மீது ஒருவர் வசைகளை வாரி இறைத்து வன்மங்களை தீர்த்துக்கொள்ளும் ஊடகங்களாக மாறி வருகின்றன. அரசியல் தலைவர் தொடங்கி பொது வாழ்வில் இருப்பவர்கள் கவனத்துடன் தங்களது கருத்துகளை வெளியிட வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

ஒருவர் தெரிவிக்கும் கருத்து இன்று பலருக்கும் தெரிய வருவது செய்தி வடிவத்தில் இருப்பதை விட மீம்ஸ் வடிவத்தில் இருப்பது தான் அதிகம். அப்படி இளைஞர்களின் கற்பனைகளுக்கு முழு வடிவம் கொடுப்பதில் மீம்ஸ் முக்கியப் பங்காற்றுகின்றன. இது வரை அரசின் திட்டங்கள், மக்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கூறுபவர்களை வைத்து நகைச்சுவையாக மீம்ஸ் போடப்பட்டு வந்தன.

விவசாயத்தை காப்போம்

ஆனால் நெட்டிசன்களில் சிலர் விவசாயத்தை பாதுகாப்பதற்கான வழிகளை மீம்ஸ்களாக போட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளனர். பாரம்பரிய விவசாயம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டிப்ஸ்களாக இவை மீம்ஸ் வடிவில் அளிக்கப்படுகிறது. புரட்டாசி பட்டம் என்ன பயிரை போடலாம்னு கேட்பவர்களுக்கு பதில் தருகிறது இந்த விவசாயத்தை காப்போம் பக்கம்.

பூச்சிக் கொல்லி வேண்டாம்

மரத்துல பூச்சித் தொல்லை இருந்தால் நாம் மருந்து தெளிப்போம். ஆனால் இயற்கையான முறையில் பூச்சியை விரட்டும் சூப்பர் பிளானையும் சொல்கிறார்கள் விவசாயத்தை காப்போம் டுவிட்டர் பக்க நெட்டிசன்கள்.

எருவாத்தான் போடனும்

மாட்டுச் சாணத்த போட்டா செடி வளருமா, அப்படியே போட்டா வளராதுபா, காய்ந்த சாணத்தை எருவாக போட்டால் தான் உரமாகும். ஏன் என்பதற்கான அறிவியல் காரணத்தையும் கூறுகிறது இந்த மீம்.

முருங்கைக்கு வீட்டு வைத்தியம்

முருங்கை மரத்துல இருக்குற பூச்சித் தொல்லைக்கு பாகுபலி சொல்லும் செமஐடியா. பாட்டி வைத்தியம் போல அதற்கும் ஒரு வீட்டு வைத்தியம் உள்ளதாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trolls and memes is not only for entertainment but also to educate the people, save farmers twitter page doing it by giving farming tips.
Please Wait while comments are loading...